Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், படிப்படியாக முன்னேறி ஜெயிக்க வேண்டும் என்ற கனவுடன் மீனா ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் பூ கட்டுவதில் லாபத்தை பார்த்த மீனா, தற்போது அடுத்து கட்ட வளர்ச்சியாக கல்யாண மண்டபகங்களில் வரும் விசேஷங்களில் பூ டெக்கரேஷனை செய்து கொடுக்கும் வியாபாரத்தை புதுசாக ஆரம்பித்திருக்கிறார்.
அதில் ஏற்கனவே சின்ன ஒரு பங்க்ஷனில் டெக்ரேசன் செய்து கொடுத்து கிட்டத்தட்ட 20,000 ரூபாய் லாபத்தை சம்பாதித்து இருக்கிறார். அதில் மீனாவின் டெக்கரேஷனை பார்த்த ஒருவர் அவருடைய பெண்ணுக்கு நடக்கப் போகும் கல்யாணத்திற்கும் மீனாதான் பூ கட்ட வேண்டும் என்று போன் பண்ணி கூப்பிட்டார். அதன்படி அந்த மண்டபத்திற்கு மீனா போன நிலையில் அங்கே சிந்தாமணியும் வந்து விட்டார்.
சிந்தாமணி வந்ததும் நான் தான் வழக்கமாக எல்லா மண்டபங்களிலும் டெக்ரேசன் பண்ணி வருகிறேன். அதே மாதிரி உங்களுக்கும் நான் பண்ணி கொடுக்கிறேன் என்று மீனா முன்னாடி வாக்குவாதம் பண்ண ஆரம்பித்து விட்டார். பிறகு யாரு கம்மி விலையில் டெக்ரேசன் பண்ணி கொடுக்கிறார் என்பதை ஒரு லிஸ்ட் போட்டு கொடுக்கிறோம். அதன் மூலம் நீங்கள் முடிவு பண்ணிக்கோங்க என்று சிந்தாமணி ஐடியா கொடுக்கிறார்.
மீனாவும் சரி என்று சொல்லிய நிலையில் டெக்ரேசன் எந்த மாதிரி எப்படி எங்கெல்லாம் பண்ண வேண்டும் என்று கேட்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு கணக்கு போட்டு கொடுக்கிறார். அதே மாதிரி சிந்தாமணி போட்ட லிஸ்ட் என்னவென்றால் மீனா என்ன தொகை சொல்கிறாரோ, அதில் பாதி பணத்தை வைத்து பண்ணி கொடுக்கிறேன் என்று எழுதி இருக்கிறார். இதை பார்த்ததும் அந்த ஓனர் சிந்தாமணிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு மீனாவின் பிசினஸை ஓரங்கட்டி விட்டார்.
இருந்தாலும் இதெல்லாம் வியாபாரத்தில் சகஜம் தான் என்ற மனப்பான்மையுடன் மீனா அங்கிருந்து கிளம்பி விட்டார். பிறகு முத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் மனோஜ் வாங்க போகும் புது வீட்டிற்கு போய் தங்குவதற்காக டிரஸ் எடுத்து வைக்கிறார்கள். ஆனால் மீனா மட்டும் பூ கட்டிக்கிட்டு இருக்கிறார். இதை பார்த்த விஜயா வழக்கம்போல் மீனாவை திட்டி நீ டிரஸ் எடுத்து வைக்கவில்லையா? விடிய விடிய பூ கட்டிக்கிட்டு இருந்தா காலையில எப்படி கிளம்புவ என்று சொல்லிய நிலையில் மீனா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பூ கெட்ட ஆரம்பித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து அனைவரும் சேர்ந்து புது வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள். ஆனால் முத்து நான் மீனாவை கூட்டிட்டு வந்து விடுகிறேன் நீங்கள் முதலில் போய் விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார். பிறகு புது வீட்டிற்கு போன ரோகிணி மற்றும் மனோஜ், ஏமாற்றும் கும்பலை வரச் சொல்லி மீதம் கொடுக்க வேண்டிய 25 லட்ச ரூபாயை ரவி, சுருதி, அண்ணாமலை மற்றும் விஜயா முன்னிலையில் வைத்து கொடுத்து விடுகிறார்கள்.
அவர்களும் பணத்தை வாங்கியதும் இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடும் என்று அவசரமாக வெளியே கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது அங்கே வந்த முத்து மற்றும் மீனா, இவர்தான் இந்த வீட்டின் ஓனரா? நம்ப முடியலையே, ஏன் வாடகை கார்ல போறாரு? என்று மனோஜிடம் சொல்கிறார். உடனே ரோகிணி, முத்துவை உதாசீனப்படுத்தும் விதமாக பேசிவிட்டார்.
ஆனால் முத்து மற்றும் மீனா சொல்லுவதை கேட்காமல் ரோகினி மற்றும் மனோஜ் பணத்தை கொடுத்ததால் இவர்களுக்கு பெரிய நாமத்தை அந்த மோசடி கும்பல் போட்டு விட்டது. அது மட்டும் இல்லாமல் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணும் போது ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் வைத்து அந்த ஏமாற்றும் கும்பலும் கையெழுத்து போட வராமல் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள். அதே நேரத்தில் அங்கே வந்த ஜீவாவும் அந்த 30 லட்ச ரூபாய் பணத்தை பற்றி முத்துவிடம் சொல்லப் போகிறார். அந்த வகையில் முத்துவிடம் ரோகிணி வசமாக சிக்கிக் கொள்ளப் போகிறார்.