சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பாண்டியன் கெஞ்சியும் அந்தர்பல்டி அடித்த அம்மாச்சி.. சாமர்த்தியமாக பேசிய கோமதி, அமைதியாக இருக்கும் ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதியின் அம்மா கதிர் மீது இருக்கும் பாசத்தினால் கதிரை பார்த்து பேச வேண்டும் என்று பாண்டியன் வீட்டிற்குள் வந்தார். அப்படி வந்ததும் வீட்டில் இருந்த அனைவரிடமும் அன்பாக பேசி சென்டிமெண்டாக பாசத்தை காட்டி விட்டார். உடனே மீனா, செந்திலுக்கு போன் பண்ணி அம்மாச்சி வந்திருக்காங்க நீங்களும் வாங்க என்று கூப்பிட்டார்.

செந்தில் கிளம்பி நிலையில் பாண்டியனுக்கும் தெரிந்த விட்டதால் மாமியாரை பார்த்து பேசுவதற்காக பாண்டியனும் வந்து விடுகிறார். ஆனால் அதற்குள் அம்மாச்சி வீட்டிற்கு போக வேண்டும் என்று கிளம்பி வாசலுக்கு வந்த நிலையில் பாண்டியன் வாசலில் வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார். அப்பொழுது சக்திவேல் மற்றும் முத்துவேல் வந்து பிரச்சனை பண்ணி இனி உனக்கும் உன் மகள் குடும்பத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

நான் எதற்காகவும் அவங்களுடன் பேச மாட்டேன் என்று சத்தியம் பண்ணுவதாக இருந்தால் நீ எங்களுடன் வா, இல்லை என்றால் எங்கேயாவது போ என்று கோபமாக முத்துவேல் பேசி விடுகிறார். இதனால் சத்தியம் பண்ண முடியாமல் தவித்து இருக்கும் அம்மாச்சி நிலைமையை புரிந்து கொண்ட பாண்டியன் அத்தை நீங்க எதுக்கும் கவலை படாதீங்க. உங்களுக்கு யாருமே இல்லை என்று நினைத்து உங்க பையன் சொல்வதை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு நாங்க எல்லாரும் இருக்கிறோம், நீங்க எங்களுடன் எங்க வீட்டுக்கு வந்துருங்க நாங்க அனைவரும் சேர்ந்து நன்றாக பார்த்துப்போம் என்று பாண்டியன், மாமியாரை கூப்பிடுகிறார். ஆனால் முத்துவேல், நீ அப்படி மட்டும் அங்க போயிட்ட என்றால் எங்கள் மூஞ்சியை பார்க்காதபடி இரண்டு வீட்டுக்கும் நடுவில் ஒரு சுவரை வைத்து விடுவேன். நீ செத்தாலும் நான் செத்தாலும் உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று தலைமுழுகி விடுவோம் என்று தேவையில்லாத வார்த்தைகளால் பேசிவிட்டார்.

உடனே கோமதி அம்மாவும், நான் உங்க கூட வந்தா நீங்க நல்லா பாத்துப்பீங்க என்று எனக்கு தெரியும். ஆனால் என் பிள்ளைகளுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையாக இது அமைந்து விடும். ஊர் மக்களும் என் பிள்ளைகளை குறை சொல்லி விடுவார்கள். அவர்கள் கௌரவத்திற்கு நான் எந்தவித கலங்கத்தையும் உண்டாக்க கூடாது. அதனால் நல்லதோ கெட்டதோ நான் என் பையன் உடனே இருந்து கொள்கிறேன் என்று சொல்லி முத்துவேலுடன் போய்விட்டார்.

உடனே வீட்டிற்குள் வந்து கோமதி, இந்த விஷயத்தை அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ, பிரச்சனை பண்ணி சண்டை போடுவார் என்ற பயத்தில் மூன்று மருமகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். மாமா அப்படியெல்லாம் எதுவும் பண்ண மாட்டாங்க கவலைப்படாதீங்க என்று சொல்லிய நிலையில் பாண்டியன் வந்ததும் நைசாக பேசி சாமர்த்தியமாக பிரச்சனையே பெரிதாக விடாமல் கோமதி பேசிவிட்டார்.

அதே மாதிரி கோமதி மனசு கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பாண்டியன், கோமதியை சமரசம் செய்து சமாதானப்படுத்தி விட்டார். ஆனால் இவ்வளவு நடந்தும் கூட ஏன் ராஜி அமைதியாக இருக்க வேண்டும். ராஜி அவருடைய அப்பாவை பார்த்து நடந்த விஷயத்தையும் எப்படி எந்த சூழ்நிலையில் கதிருடன் கல்யாணம் ஆனது என்ற உண்மையை அட்லீஸ்ட் முத்துவேலுக்கு மட்டுமாவது சொல்லி இருந்தால் நிச்சயம் முத்துவேல், கோமதி குடும்பத்தின் மீது இவ்வளவு வன்மத்தை கக்க மாட்டார்.

அத்துடன் மச்சானாக பாண்டியனையும் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் ராஜி சீக்கிரத்தில் நடந்த உண்மைகள் அனைத்தையும் முத்துவேலுவிடம் சொன்னால் நன்றாக இருக்கும்.

Trending News