வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வெற்றிமாறனுக்கு செக் வைத்த தணிக்கை குழு.. மொத்த பில்லரையும் காப்பாற்ற தில்லாக எடுத்த முடிவு

கடந்த இரண்டு வருட போராட்டத்திற்கு பின்பு விடுதலை இரண்டாம் பாகம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அந்த படம் சென்சார் கமிட்டிக்கு சென்றுள்ளது. அந்த படத்தைப் பார்த்த சென்சார் போர்டு வெற்றிமாறனுக்கு செக் வைத்துள்ளது.

பொதுவாக அதீத வன்முறை, அருவருப்பான காட்சிகள், தேவையில்லாத வசனங்கள் போன்றவற்றை அனைத்து தரப்பினரும் பார்ப்பதற்கு சென்சார் போர்டு அனுமதிக்காது. கொடுக்கும் சர்டிபிகேட்டுக்கு தகுந்தார் போல் நாம் படங்களை பார்ப்பதை யூகித்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது விடுதலை 2 படத்திற்கு சென்சார் போர்டு “A” சர்டிபிகேட் கொடுத்து உள்ளது. முதல் பாகத்தில் காவல்துறையினர் அத்துமீறி செய்யும் துன்புறுத்தலை காட்டி இருந்தார் வெற்றிமாறன். அதே போல் இந்த பாகத்திலும் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கையில் வேறு ஒரு விஷயத்துக்காக “A”சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.

ஒரே ஒரு வசனத்திற்காக மட்டுமே இந்த படத்திற்கு இத்தகைய சான்றிதழை வழங்கி உள்ளனர். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக ராஜூ மேனன் நடித்துள்ளார். அவர் பேசும் ஒரு வசனத்தை சென்சார் போர்டு குறி வைத்துள்ளது. இது அத்துமீறிய வசனம் இதை நீக்குங்கள் என வெற்றிமாறனிடம் கேட்டுக்கொண்டது.

அந்த வசனம் தான் இந்த படத்திற்கே பில்லர் போன்றது. அதை நீக்கி விட்டால் மொத்த படமும் பொலிவிழந்து விடும். அதனால் நீங்கள் இதற்கு தாராளமாக “A” சர்டிபிகேட் கொடுங்கள் என கேட்டு வாங்கி உள்ளார் வெற்றிமாறன். இதனால் இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News