சூரி நடிக்கும் படங்கள் அனைத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில், அவரது விடுதலை 2 படத்தை மிகுந்த எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
இருப்பினும் விடுதலை 2 படத்தில் சூரிக்கு Importance குறைவாக இருக்கும் என்றே சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி நடிப்பில் வெளியான கருடன் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் 100 கோடியை கடந்தது.
இது இவருக்கு கிடைத்த மாபெரும் Opening-ஆகவே பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் இவர் நடிப்பில் வெளியான கொட்டுக்காலி படமும் நல்ல விமர்சனத்தை பெற்றது.
ஆனால் சாதாரண மக்களுக்கு படம் புரியாத காரணத்தால் வசூலில் தோல்வியா தழுவியது.
ஐஸ்வர்யா லட்சுமி-க்கு மாமனான சூரி
இந்த நிலையில், சூரி விடுதலை 2 படத்தை தொடர்ந்து, மீண்டும் எல்ரெட் குமார் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். இதற்க்கு நடுவில், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இந்த காம்போவே வித்தியாசமாக இருக்கிறது. இப்படி இருக்க, இந்த படத்துக்கு மாமன் என்று பெயர் வைத்துள்ளார்கள்.
ஒரு வகையில் படம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் பெயர் ஒரு குடும்ப படம் போல இருக்கிறதே என்று ரசிகர்களுக்கு Confusion-ஆக உள்ளது.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான விலங்கு வெப் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
விறுவிறுப்பான கதைக்களத்தை கொடுக்கும் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் என்பதால், நிச்சயம் இந்த படம் Box Office-ல் பட்டையை கிளப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.