Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது விறுவிறுப்பாகவும் தந்திரமாகவும் விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்த முதல் போட்டியாளர் தர்ஷிகா தான். ஆனால் போகப் போக தன்னை பிக் பாஸ் வீட்டிற்குள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வெளியே பிரபலமாக வேண்டும்.
அப்படி பிரபலமாக வேண்டும் என்றால் வீட்டிற்குள் யாரையாவது காதலித்து காதல் கன்டென்ட் கொடுத்தால் மட்டும்தான் மக்களிடத்தில் இடம் பிடிக்க முடியும் என்று ஒரு தவறான கண்ணோட்டத்தை நம்ப ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் தர்ஷிகாவிடம் சிக்கியது விஷால் தான். தர்ஷிகாவிடம் பேசுவதற்கு முன் விஷாலும் ஓரளவுக்கு விளையாட்டு விளையாடி மக்களிடத்தில் நல்ல பேரை சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் எப்பொழுது இவர்கள் இருவரும் கிரிஞ்சாக காதலிக்க ஆரம்பித்தார்களோ, அப்பொழுது இவர்களுடைய விளையாட்டு முடிந்து விட்டது என்று மக்கள் முடிவு கட்டி விட்டார்கள்.
இவர்களுடைய கிரின்ச் காதலை பார்க்க முடியாத மக்கள் உடனடியாக இவர்களை பிரித்தாக வேண்டும் என்று தர்ஷிகாவே வெளியே கொண்டுவர முடிவு பண்ணி விட்டார்கள். அந்த வகையில் நேற்று முதல் பலியாடாக தர்ஷிகா கம்மி ஓட்டுகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
அப்படி வெளியேறும் பொழுது விஷாலை கட்டி அணைத்து உறுகி அவருடைய காதலை வெளிப்படுத்திட்டு தான் வந்தார். அது மட்டும் இல்லாமல் அவருடைய அம்மாவின் ஞாபகார்த்தமாக போட்டிருந்த மோதிரத்தை தர்ஷிகா, கழட்டி அதை விஷாலுக்கு கொடுத்து இதுதான் காதலின் நினைவு சின்னம் என்று சொல்லாமல் சொல்லி கொடுத்துவிட்டார்.
ஆனால் தர்ஷிகா வெளியேறிய பிறகு அதை கொஞ்சம் கூட பீல் பண்ணாமல் விஷால் அவருடைய விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் விஷாலும் தற்போது ஓட்டுக்களை கம்மியாக பெற்று வரும் நிலையில் கூடிய சீக்கிரத்தில் விஷாலும் பிக் பாஸ் விட்டு விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷிகா, விஜய் சேதுபதியிடம் பேசிய பொழுது அவருடைய ஞாபகங்கள் கலந்த வீடியோவை போட்டு காட்டப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த தர்ஷிகாவுக்கு புரிந்திருக்கும் நம்முடைய முழு நேரத்தையும் செலவழித்தது விஷாலுடன் தான் என்று.
ஆனாலும் கடைசி வரை இது தவறு இல்லை என்ற நோக்கத்தில் தான் தர்ஷிகா பார்த்திருக்கிறார். அதனால் தான் விஜய் சேதுபதி அந்த வீடியோவை போட்டுவிட்டு எந்த இடத்தில் நீங்கள் பின்தங்கி இருந்திருக்கிறீர்கள் என்று புரியுதா என கேட்டு பொழுது சிரித்து மலுப்பு இருக்கிறார்.
ஒரு வேளை இப்பொழுது பல வீடியோக்களையும் மீம்ஸ்களையும் பார்த்த பிறகு தர்ஷிகாவிற்கு புரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால் விஷால் மீது உண்மையான காதல் இருந்தது என்றால் விஷால் வெளியே வந்த பிறகும் அவர்களுடைய காதல் கைகூடுதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.