திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கேஜிஎஃப் 2 சாதனையை முறியடித்த புஷ்பா 2.. 11 நாட்களில் செய்த வசூல்

Pushpa 2 collection : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுகுமார் இயக்கி இருந்தார். மேலும் ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார்.

ராஜமவுலி, பிரபாஸ் கூட்டணியில் வெளியான பாகுபலி படம் 900 கோடி வசூல் செய்திருந்தது. அந்த வசூலை புஷ்பா 2 படம் முறியடித்திருக்கிறது. அதாவது உலக அளவில் புஷ்பா 2 படம் 166.80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளது.

அதாவது அதன் இந்திய மதிப்பீட்டுத் தொகை 1415 கோடியாகும். இரண்டாவது வாரம் முடிவில் 11 நாட்களில் 1400 கோடி வசூலை அசால்ட் ஆக புஷ்பா 2 படம் எட்டி இருக்கிறது. மேலும் இதற்கு முன்னதாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 படம் 859.1 கோடி வசூலை பெற்றது.

புஷ்பா 2 படம் 11 நாட்களில் செய்த கலெக்ஷன்

இப்போது பல சாதனைகளை முறியடித்து புஷ்பா 2 படம் வசூலை குவித்து கொண்டிருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றிருக்கிறது.

மேலும் சமீபத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்தது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் அதுவும் அவருக்கு ஆதரவாக மாறி இருக்கிறது. தெலுங்கு பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

அதோடு புஷ்பா 2 படம் இன்னும் சில நாட்களிலேயே 2000 கோடி வசூலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் இப்போது ஒரு இன்டர்நேஷனல் ஹீரோவாக இந்த படத்தின் மூலம் மாறி இருக்கிறார்.

- Advertisement -

Trending News