செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17, 2024

சன் டிவி சீரியலும் வேண்டாம், ஜி தமிழிலும் வேண்டாம்.. விஜய் டிவிக்கு தாவிய சின்ராசு, ஆதிரைக்கு ஜோடி இவரா?

Vijay Tv Serial: சின்னத்திரை ஆர்டிஸ்ட்களை பொருத்தவரை சீரியலில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆகிவிட்டால் அவர்களுக்கு அடுத்தடுத்து புது சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் எத்தனையோ ஆர்ட்டிஸ்ட்களுக்கு மாபெரும் வாய்ப்பு கிடைத்து மக்கள் தூக்கி கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்கள்.

அதில் ஒருவர் சின்னத்திரை கதாநாயகனாக அறிமுகமாகிய நிலையில் தற்போது இவருடைய அனுபவத்திற்கும் நடிப்புக்கும் மக்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த கதாநாயகன் யார் என்றால் கிட்டத்தட்ட 24 வருடங்களாக சின்ன திரையில் ஜொலித்து வரும் நடிகர் ஸ்ரீ குமார்.

இவர் சன் டிவியில் சூலம் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி கேளுங்க மாமியாரை நீங்களும் மருமகள் தான், ஆனந்தம், பந்தம், உறவுகள், பிள்ளை நிலா, பொம்மலாட்டம், யாரடி நீ மோகினி, வானத்தைப்போல போன்ற எக்கச்சக்கமான சீரியல்களில் நடித்து பல வெற்றி நாடகங்களை குவித்திருக்கிறார்.

இப்படி அதிகமாக சீரியல்களில் நடித்தது சன் டிவியாக இருந்தாலும் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் நடித்து இப்ப உள்ள ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் கடைசியாக சன் டிவியில் வானத்தைப்போல என்ற சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் தங்கச்சி மேலே பாசம் வைத்திருக்கும் பாசக்கார அண்ணனாக நடித்திருந்தார்.

அந்த நாடகம் பல வருடங்களாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது சன் டிவியும் வேண்டாம் ஜீ தமிழ் வேண்டாம் என்று விஜய் டிவி சீரியலுக்கு தாவி இருக்கிறார். தனம் என்ற புத்தம்புது சீரியல் ஒளிபரப்பாக போகிறது. இதில் முக்கிய கதாநாயகனாக ஸ்ரீகுமார் கமிட் ஆகியிருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிக்க போகும் கதாநாயகி யார் என்றால் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் தங்கை ஆதிரையாக நடித்த சத்தியா இணைந்து கலக்கப் போகிறார். இந்த சீரியல் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ முடிந்த பிறகு பிரேம் டைமிங் இல் புத்தம் புதுசாக வரப்போகிறது.

- Advertisement -

Trending News