செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17, 2024

நம்பியாரின் ஆசைகள் என்னென்ன தெரியுமா?கேட்டா தலை சுற்றி கீழே விழுந்துவிடுவீர்கள்

படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்த நம்பியார் நிஜ வாழ்க்கையில் தீவிர ஐயப்ப பக்தன். அவரை போல ஒரு நல்லவரை பார்க்கவே முடியாது.

அப்பேற்பட்ட வில்லனுக்கு இருந்த ஆசைகளை கேட்டால், தலை சுற்றி விழுந்துவிடுவீர்கள். காரணம், அவரை போல வாழ்க்கையை ரசித்து வாழ்ந்த மனிதனே இல்லை என்று தோன்றும்.

MGR-உடன் பல படங்களில் மோதிய நம்பியார் நிஜத்தில் நெருங்கிய நண்பர். ஒரு சில படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவரை வில்லனாக பார்த்து பழகிய மக்களுக்கு நல்லவராக பார்க்க முடியவில்லை.

அதனாலயே, அவர் ஹீரோவாக நடித்த ஒரு படம் பெருசாக ஓடவில்லை. ஒரு காலத்துக்கு மேல், குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வில்லனின் ஆசைகள் என்னென்ன தெரியுமா?

நம்பியார் ஒரு ஆன்மீக வாதி மட்டுமல்ல, அறிவியல் வாதியும் கூட. அவருக்கு உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்திருக்கிறது.

அவரது ஆசை பட்டியலை வரிசையாக பார்ப்போம். அவரது முதல் ஆசை பிலிப்பைன்ஸ் அருகில் இருக்கும் பசிபிக் பெருங்கடல் சுமார் 40,000 அடி ஆழம் இருக்கும். அந்த ஆழத்தை பார்க்கவேண்டும் என்று ஆசையாம்.

மேலும் அலஸ்காவும், சைபீரியாவும் ஒன்றாக சேரும் இடமாக பேரிங் ஸ்ட்ரீட் உள்ளது. அந்த வழியாக தண்ணீருக்குள் நீந்தி ஆர்டிக் பெருங்கடலும் சென்றடைய வேண்டும் என்றும் ஒரு ஆசை இருந்ததாம்.

அதுமட்டுமின்றி தென் துருவத்தில் நடந்து செல்லவேண்டும் என்றும் ஆசை இருந்ததாம். அமெரிக்காவில் உள்ள ஆன்டஸ் மலைக்கு செல்லவேண்டும்.டோக்கியோவில் இருந்து கோபன்ஹேகனுக்கு போகணும், என்று பல ஆசைகளை கூறினார்.

குறிப்பாக இது எல்லாம் நடக்கவில்லை என்றாலும் நல்லவனாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அத்துப்படி வாழ்ந்தேன் என்று பெருமிதத்துடன் கூறினார் நம்பியார்.

இது ரசிகர்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மற்ற ஆசைகள் கூட, ஓகே.. ஆனால் நல்லவனாக வாழ்வது கடினம்.

அதையே இவர் சாதித்து விட்டார் என்று பெருமிதத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News