தனுஷ் இட்லி கடை படத்தை 70% முடித்து விட்டார். இவர் இயக்கும் நான்காவது படம் இது. மூன்று, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என மூன்று படங்களை டைரக்ட் செய்துள்ளார். இட்லி கடை படத்தை முடித்ததற்கு பின் இளையராஜா வாழ்க்கை வரலாறு நடிப்பதற்கு கமிட் ஆனார்.
இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. 70களில் எப்படி இளையராஜா இருந்தாரோ அதேபோல் தன்னை மாற்றிக் கொண்டு ஸ்டில்கள் வெளியிட்டு இருந்தார் தனுஷ். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக இருந்தது ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
ஆரம்பத்தில் பாலிவுட்டில் இளையராஜா படத்தை இயக்குவதற்காக இயக்குனர் பால்கி தயாரானார். தயாரிப்பாளரோடு தான் இளையராஜாவை சந்தித்தார் பால்கி. எல்லாத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்த இளையராஜா தயாரிப்பாளர் மட்டும் இங்கே பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
அது மட்டும் இன்றி இந்த படத்திற்கு பங்கு வேண்டாம், பார்ட்னர்ஷி வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் அது ஒத்து வராது என்று இயக்குனர் பால்கி இதில் இருந்து விலகிக் கொண்டார். இப்பொழுது அந்த படத்திற்கு தயாரிப்பாளர் இல்லை. இதனால் தனுஷ் டெல்லி வரை சென்று தெரிந்தவர்களை பார்த்து வந்தார்.
இப்பொழுது அருண் மாதேஸ்வரன்.இளையராஜாவுடன் டிராவல் செய்து கொண்டிருக்கிறார். தனுஷும் இந்த படத்திற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்றால் அவரே இந்த படத்தை இயக்கும் முடிவில் இருக்கிறார். இளையராஜா அவருக்கு குரு போன்றவர் அதனால் அவருடைய பயோபிக் படத்தை விட்டுக் கொடுக்க முடியாது என விடாப்படியாய் நிற்கிறார்.