Bigg Boss Tamil 8 Ranaav: பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் ஆரம்பித்து விட்டாலே ஒவ்வொரு போட்டியாளர்களும் வெறித்தனமாக விளையாட ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் இன்னும் வெற்றியை நோக்கி பயணிப்பதற்கு 30 நாட்கள் தான் இருக்கிறது என்பதால் ஒவ்வொருவரும் அவர்களுடைய வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு போராடி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மூன்று போட்டியாளர்களாக சேர்ந்து ஒவ்வொரு டீமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு டீம் பவித்ரா, அன்சிதா மற்றும் ஜெஃப்ரி. இவர்கள் அவர்களுடைய கல்லை பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பவித்ரா அந்த கல்லை அடுக்கிக்கொண்டு வருகிறார். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக ராணவ் அந்த கல்லை எடுக்க வருகிறார்.
ஆனால் ராணவை எடுக்க விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக ஜெஃப்ரி, ராணவ் உடன் மோதுகிறார். அப்படி மோதும் பொழுது ஒரு கை தோள்பட்டை ராணவிற்கு கொஞ்சம் கீழே இறங்கி விட்டது. அந்த அளவிற்கு விடாப்படியாக ஜெப்ரி தள்ளியிருக்கிறார். இதனால் கீழே விழுந்து வலியால் துடிக்கும் ராணவ் வலிக்குது என்று கதறுகிறார்.
ஆனால் ஜெப்ரி நான் எதுவும் பண்ணவில்லை அவன் சும்மா நடிக்கிறான் என்று சொல்லிய நிலையில் அங்கே வந்த அன்சிதாவும் அவன் நடிக்கிறான். அவனை யாரும் நம்ப வேண்டாம் என்று சொல்லி அவர்களுடைய டாஸ்கை முடிப்பதற்காக கல்லை மட்டுமே பாதுகாக்க தயாராகி விட்டார்கள். ஆனால் இதில் என்ன கொடுமை என்றால் பவித்ரா பக்கத்தில் தான் ராணவ் படுத்துக் கொண்டு வலியால் துடிக்கிறார்.
அப்பொழுது கூட பவித்ரா, ராணவை பார்த்து என்னாச்சு ஏதென்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் அந்த டாஸ்கை முடிக்க வேண்டும் என்று கல் மீதுதான் கவனத்தை செலுத்துகிறார். ராணவ் நடிக்கிறாரோ இல்லையோ ஒருத்தர் வலியால் கதறும் பொழுது என்னாச்சு என்று ஒரு வார்த்தையாவது கேட்டிருக்கலாம்.
ஆனால் பவித்ரா, அன்சிதா மற்றும் ஜெஃப்ரி மூன்று பேருமே ராணவை கண்டுகொள்ளாமல் விட்டார்கள். அவர் வலியால் துடிக்கும் சத்தத்தை கேட்டு அருண் அங்கிருந்து ஓடி வந்து என்னாச்சு என்று அவரை தூக்கி பத்திரமாக ரூம்குள் கூட்டிட்டு போகிறார். கூடவே விஷாலும் உதவி செய்திருக்கிறார். ஆக மொத்தத்தில் அந்த வீட்டில் அருணை பற்றி மோசமான விமர்சனங்கள் எழுந்திருந்தாலும் இந்த விஷயத்தில் அருணை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை.
அந்த அளவிற்கு மனிதாபிமானத்துடன் அருண் விளையாடி வருகிறார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் அவர்களுடைய விளையாட்டை ஆரம்பித்த நிலையில் பிக் பாஸ் இந்த டாஸ்க் கொஞ்ச நேரம் நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று சொல்லி ராணவ் கை வலியால் இருப்பதால் அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தகவலை கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் டாக்டர் கொடுத்த அட்வைஸ் படி மூன்று வாரம் ராணவ் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று தகவல் வெளியாயிருக்கிறது. இதனை தொடர்ந்து ராணவ் அவருடைய விளையாட்டை விளையாடுவதற்கு மீண்டும் வருவாரா? அல்லது ஓய்வு எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.