Viduthalai 2: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை நல்ல வரவேற்பை பெற்றது. அதை அடுத்து விடுதலை 2 தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.
இந்த பாகம் முழுவதும் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியை சுற்றி தான் நகர்கிறது. அதனாலயே படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.
வரும் 20ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சார் சர்டிபிகேட் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி விடுதலை 2 A சர்டிபிகேட்டை பெற்றுள்ளது.
மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஆகும். இதில் பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருக்கிறது.
விடுதலை 2 படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சர்டிபிகேட்
அதிலும் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்ட களத்தில் இருந்து உருவாக்கிக்கணும். இந்த வசனம் கொஞ்சம் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல் படத்தில் பல கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது. வெற்றிமாறன் படத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகளும் வசனங்களும் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் சென்சார் போர்டு தன்னுடைய கடமையை செய்திருக்கிறது. அதன்படி அந்த வசனங்கள் அனைத்தும் மியூட் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக விடுதலை 2 ரசிகர்களின் பார்வைக்கு வர தயாராக இருக்கிறது.