புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

அந்தப் படத்துல நான் செஞ்ச தப்பு இதான்.. இத்தனை வருஷம் கழித்து ஒப்புக்கொண்ட மணிரத்னம்

மணிரத்னம் தமிழில் பகல் நிலவு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதில் முரளி – ரேவதி இருவரும் நடித்தனர். அப்படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்து, மோகன் நடிப்பில் இதயகோவில் படம் இதிலும் இளையராஜா இசை. படலும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இவ்விரு படங்களின் மூலம் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்த அவர் தமிழில் 3வதாக இயக்கிய படம் தான் மெளன ராகம். இப்படத்தில் மோகன் – ரேவதி – கார்த்திக் மூவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, லெனினின் எடிட்டிங், இதெல்லாம் படத்துக்கு பக்கபலமாக இருந்தன. இளையராஜாவின் இசையில் நிலாவே வா, மஞ்சம் வந்த தென்றலுக்கு, சின்ன சின்ன வண்ணக்குயில், பனி விழும் இரவு, ஓஹோ மேகம் வந்தாச்சு ஆகிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.

1986 ல் வெளியான இப்படம் கிளாசிக் படங்களின் வரிசையில் எல்லோருக்கும் பிடித்தமான படமாக உள்ளது. இந்தப் படம் ரிலீசான போது, இதை சென்னையில் சென்று பார்க்காமல், தூரத்தில் உள்ள ஒரு தியேட்டருக்குச் சென்று மணிரத்னம் பார்த்துள்ளார்.

அப்போது, தியேட்டரில் அதிகளவில் கூட்டமில்லை. இதைப் பார்த்த அவர், நம்ம படத்துக்கு இவ்வளவுதான் ரசிகர்கள் வருவார்களோ என நினைத்து படம் பார்த்தார்.

படம் முடிந்து வெளியே வந்த போது, அப்படம் பார்க்க வந்த பெரியவர் ஒருவர், யாருடா இவர், பொண்டாட்டிட்ட இப்படி இருக்கிறான். நாலு சாத்து சாத்துனா அவளே தானா வழிக்கு வரப்போறாள் என்று கூறினார்.

இதைக் கேட்டபின், மணிரத்னத்துக்கு படத்தில் தான் செய்த தவறு என்னவென்று புரிந்துள்ளது. மேலும், படத்தில் ரேவதியை மோகன் அடிப்பது போன்ற காட்சியை வைத்து, அடிப்பது ஒன்றும் தீர்வாகப் போவதில்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்ற குற்றவுணர்வு தனக்கு ஏற்பட்டதாக மணிரத்னம் கூறியுள்ளார்.

- Advertisement -

Trending News