புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரோஜா படத்தில் வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

ஏ.ஆர் ரஹ்மான் முதல் முறையாக சினிமாவுக்கு இசையமைத்தது ரோஜா படத்தில் தான். ஆரம்ப காலத்தில் ஹிந்தி பாடல்கள் மட்டுமே பெரும்பாலும் ரசித்து கேட்டு கொண்டிருந்த தமிழர்களுக்கு புதுவிதமான இசையை கொடுத்தவர் இளையராஜா என்றால், அதிலும் புதுமையான Revolution-னை உருவாக்கியவர் ஏ.ஆர். ரஹ்மான். அவரது இசை நரம்புகளை எல்லாம் சிலிர்க்க வைத்தது.

முதல் படத்திலேயே எல்லா பாடல்களும் சூப்பர்ஹிட். இதை தொடர்ந்து மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறினார் ரஹ்மான். மேலும் ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். தற்போது கூட labon trinity-யின் President-ஆக பொறுப்பேற்று உலக இசைமணிப்பாளர்கள் மத்தியில் புகழ் பெற்றவராக மாறியுள்ளார்.

ரோஜா படத்துக்கு முன்..

இப்படி பல பெருமைகள் பொக்கிஷமாக விளங்கும் ரஹ்மான், முதல் முறையாக எப்படி தன் திறமையை வெளிப்படுத்தினார் தெரியுமா? அவர் ஒரு விளம்பரத்துக்கு தான் முதல் முதலில் இசையமைத்தார். லியோ காபி தூள்-காண விளம்பரத்துக்கு இசையமைத்து, அந்த விளம்பரம் பயங்கர ஹிட் ஆனது. அந்த விளம்பரத்தில் அரவிந்த் ஸ்வாமி தான் நடித்திருப்பார்.

இதை தொடர்ந்து தான் அவருக்கு ரோஜா படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி இருக்க, இந்த விளம்பரத்தின் இசை, ஹாரிஸ் ஜெயராஜின் முதற் கனவே பாடல் Tune போல இருக்கும். அதனால் இதை அவர் தான் இசையமைத்தாரா என்ற சந்தேகம் பலருக்கு இருந்து வந்தது. ஆனால் ஹாரிஸ் ஆரம்ப காலத்தில், ar ரஹ்மானிடம் வேலை பார்த்துள்ளார்.

அதன் பின் தான் தனியாக இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார். அப்படி முதற் கனவே பாட்டை உருவாகும்போது ரஹ்மானிடம், அந்த இசைக்கு அனுமதி பெற்று தான் இதை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News