Nayanthara: இந்த வருடம் சோசியல் மீடியாவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு நயன் என்று சொல்லிவிடலாம்.
அந்த அளவுக்கு அவர் தனுஷை வைத்து பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டார். அது அவருக்கே வினையாக முடிந்தது.
அவரைப் பற்றி கடும் நெகட்டிவ் விமர்சனங்கள் கூட கிளம்பியது. அதில் வலைப்பேச்சு சேனலில் நயன் விக்னேஷ் சிவன் தனுஷ் காசை கரைத்ததை பற்றி வெளிப்படையாக கூறியிருந்தனர்.
இதனால் கடுப்பான நயன் அவர்களை மூன்று குரங்குகள் என சொல்லி இருந்தார். அதன் விளைவு தற்போது அவரை மீண்டும் சீண்டி இருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.
தனுஷ் காசில் மஞ்ச குளிச்ச நயன்
அவர் தனுஷ் காசில் நயன்தாரா மஞ்ச குளித்து விட்டார் என கடுமையாக விமர்சித்துள்ளார். நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் பாதி நாள் கேரவனில் தான் காதல் ஜோடி இருப்பார்களாம்.
அதிலும் நயனை அழகாக காட்டுவதற்காக விக்கி பல காட்சிகளை திரும்பத் திரும்ப எடுத்திருக்கிறார். அதைப் பற்றி கூறியுள்ள அந்தணன் நயன், தனுஷ் மட்டுமல்லாமல் மற்ற தயாரிப்பாளர்களுக்கும் தொல்லை கொடுத்துள்ளார்.
அவர் நடித்த O2 படத்தில் அழுக்கு மேக்கப் போட மாட்டேன் என நயன் அடம்பிடித்தாராம். அந்த படத்தை முடிப்பதற்குள் இயக்குனருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
இப்படியெல்லாம் இருக்கும் அவர் அடுத்தவர்களை குறை சொல்லலாமா என அந்தணன் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படியாக நயன் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.