புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து All Rounder அஸ்வின் ஓய்வு.. ரசிகர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், 4 வது டெஸ்ட் போட்டியை டிரா செய்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழக வீரரும் ஆல்ரவுண்டருமான அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்( 38 வயது ) இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறந்த பந்துவீச்சாளராக அணிக்குப் பங்காற்றினார்.

பந்து வீச்சில் மட்டுமின்றி, டெஸ்ட் போட்டியில் பல அணிகளுக்கு எதிரான திறமையான பேட்டிங் மூலம் தன்னை சிறந்த பேட்ஸ்மேன் எனவும் நிரூபித்துள்ளார். அதன்படி, 6 சதங்களுடன் 2506 ரன்கள் குவித்துள்ளார்.

அஸ்வினை கெளரவித்த பிசிசிஐ அமைப்பு

குறிப்பாக சென்னையில் நடந்த போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான 80 ரன்களுக்கு 6 விக்கெட் சரிந்து, வீழும் நிலையில் இருந்த அணியை சதம் அடித்து உதவினார்.

மேலும், 106 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அவர் 537 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 2 வது இட்த்தில் உள்ளார்.

அதேபோல் சர்வதேச வீரர்கள் பட்டியலிலும் 7 வது இடத்தில் அஸ்வின் உள்ளார். டெஸ்ட், ஒரு நாள், ஐபில் தொடரில் அஸ்வினின் பங்கு முக்கியமானது.

அவரது திடீர் ஓய்வு அறிவிப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அவருக்கு நன்றி தெரிவித்து, பிசிசிஐ ஒரு புகைப்படம் வெளியிட்டு, அவரை கெளவிரத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News