Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் வீட்டை சொந்தமாக வாங்கிட்டோம் என்று நினைத்து ஏமாந்த வீட்டிற்கு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் கூட்டிட்டு வந்து விட்டார். அந்த வீட்டை பார்த்த விஜயா, என் பையன் சாதித்து எனக்கு பெருமை சேர்த்துட்டான். கோடீஸ்வரனாக ஆகிவிட்டான் என்று பெருமையில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார்.
சும்மாவே மற்றவர்கள் யாரும் விஜயாவின் கண்ணுக்கு தெரியாது. அதிலும் மீனாவையும் முத்துவையும் மட்டம் தட்டுவதையே விஜயா செய்து வருவார். அந்த வகையில் புதுசாக வாங்கிய வீட்டில் எஜமானியாக கால் மேல் கால் போட்டு மீனாவை காபி போட்டுக் கொண்டு வா என்று ஆர்டர் போடுகிறார். அப்பொழுது அந்த வீட்டில் எதுவுமே இல்லை என்பதால் மனோஜ் பால் ஆன்லைன் ஆர்டர் போடுறேன். உங்களுக்கு ரோகினி சூப்பரா காப்பி போட்டு கொடுப்பாள் என்று மனோஜ் சொல்கிறார்.
அதற்கு விஜயா, ரோகினி ஏன் போட்டுக் கொடுக்கணும் அவள் இந்த வீட்டுக்கு எஜமானி பார்லருக்கு ஓனர் என்று பெருமையாக பேசி இந்த வேலை எல்லாம் செய்வதற்கு தான் மீனா இருக்கிறார் என்று மட்டுமரியாதை இல்லாமல் பேசி விட்டார். பிறகு அந்த வீட்டிற்கு ஏற்ற ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று பெயர் வைக்கக்கூடிய ஆளை வர சொல்லி ரோகிணி, மனோஜ் மற்றும் விஜயா இந்த மூன்று பெயரும் சேர்ந்த மாதிரி ஒரு பெயர் சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவர் ரோமையா என்ற பெயரை சொல்லிய நிலையில் விஜயா ரொம்பவே சந்தோஷப்பட்டு குதிக்க ஆரம்பித்து விட்டார். உடனே அவர் இந்த பேரை சொன்னதற்காக 25 ஆயிரம் கேட்டதும் எதைப் பற்றியும் யோசிக்காமல் மனோஜ் அதை உடனே அனுப்பி விடுகிறார். இதை பார்த்த அங்கு இருப்பவர்கள் மனோஜ் கொஞ்சம் ஓவராக தான் போகிறான் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அடுத்ததாக அந்த வீட்டில் ஏதாவது பேய் பிசாசு இருக்குமா என்ற சந்தேகத்தில் அதை நிவர்த்தி பண்ணும் விதமாக மந்திரவாதியை கூப்பிட்டு வா என்று மனோஜ் அவருடைய நண்பருக்கு சொல்கிறார். உடனே மனோஜின் நண்பர் அதற்கு ஏற்ற மந்திரவாதியை கூட்டிக்கொண்டு வந்த நிலையில் அவரும் சில சூட்சுமங்களை பண்ணி மனோஜ் இடம் இருந்து பணத்தை கரைக்கலாம் என்று எப்படியும் லட்ச கணக்கில் பணத்தை வாங்கி விடுவார்.
ஏற்கனவே இந்த வீட்டுக்கு தண்டமாக முப்பது லட்ச ரூபாய் பணத்தை ஏமாந்துட்டார், ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணும் போது அந்த ஏமாற்றி கும்பல் வராமல் மனோஜ்க்கு நாமத்தை போட போகிறார்கள். அத்துடன் இந்த வீட்டிற்கு அப்படி இப்படி என்று ஒரு செலவையும் மனோஜ் செய்து வருகிறார். அதே ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு ஜீவா வந்த நிலையில் ரோகிணி மற்றும் மனோஜ் செய்த தில்லாலங்கடி வேலையை முத்துவிடம் சொல்லிவிடுவார்.
அதாவது மனோஜ் என்னிடம் ஏமாந்த பணத்தை ரோகிணி பிளான் பண்ணி வட்டி முதலுமாக 30 லட்சம் ரூபாயை திருப்பி வாங்கிக் கொண்டார் என்று முத்துவுக்கு தெரியவரும் நிலையில் அந்த பணத்தை வைத்து தான் ஷோரூம் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் கண்டுபிடித்து விடுவார். அந்த வகையில் இனி ரோகிணி ஆட்டத்துக்கு மொத்தமாக ஜீவா மூலம் முத்து பெரிய சங்கு ஊதப் போகிறார். எல்லா பக்கமும் நஷ்டப்பட்டு பழைய மாதிரி பிச்சை எடுக்க ரோகிணி மற்றும் மனோஜ் தயாராக போகிறார்கள்.