புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

அட்லியை உருவ கேலி செய்த நடிகர்.. ரியாலிட்டி ஷோவில் நடந்தது என்ன.?

Atlee: தமிழில் விஜய்க்கு பிடித்த இயக்குனரான அட்லி இப்போது பாலிவட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டியது.

அதைத்தொடர்ந்து தற்போது அவர் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரித்துள்ளார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகிறது.

அதன் பிரமோஷனில் தற்போது பட குழுவினர் பிஸியாக உள்ளனர். அதில் அட்லி பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு படத்தை பிரமோட் செய்து வருகிறார்.

அதன்படி சமீபத்தில் அவர் நடிகர் கபில் சர்மா நடத்தும் காமெடி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அப்போது அநாகரிகமாக கேட்கப்பட்ட ஒரு கேள்வி தற்போது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

அட்லியை உருவ கேலி செய்த நடிகர்

எப்போதுமே கபில் சர்மா நிகழ்ச்சிக்கு வரும் கெஸ்ட்டை கேலி கிண்டல் செய்யும் படி ஏதாவது பேசுவார். அப்படித்தான் அட்லியையும் அவர் உருவ கேலி செய்தார்.

அதாவது அட்லியிடம் அவர் நீங்கள் முதல்முறையாக கதை சொன்ன போது அவர்களுக்கு உங்களை அடையாளம் தெரிந்ததா? இல்லை அட்லி எங்கே? என்று கேட்டார்களா என நக்கலாக கேட்டார்.

உடனே அட்லி இந்த விஷயத்தில் ஏ ஆர் முருகதாஸுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் என் கதையை மட்டும் தான் கேட்டார்.

நான் யார் என்னுடைய தோற்றம் பற்றி எல்லாம் அவர் பார்க்கவில்லை. நான் கதை சொன்ன விதம் அவருக்கு பிடித்திருந்தது. அப்படித்தான் இங்கு ஒருவரின் திறமையை தான் மதிப்பிட வேண்டும்.

தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது என நெத்தியடி பதிலை கொடுத்தார். இருப்பினும் இது தற்போது ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

கபில் சர்மா எப்படி அட்லியை அநாகரிகமாக கேள்வி கேட்டு அவமானப்படுத்தலாம் என கருத்துக்கள் கிளம்பியுள்ளது. உடனே அவர் என்னுடைய கேள்வி அந்த அடிப்படையில் கிடையாது.

முதலில் அதை புரிந்து கொண்டு ஒருவரை திட்டுங்கள் என விளக்கம் கொடுத்துள்ளார். இருப்பினும் அவருடைய முறையற்ற இந்த பேச்சு ரசிக்கும் படி இல்லை என்பதால் எதிர்ப்புகள் தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

Trending News