Vignesh Shivan: கொடிக்குளம் பேச்சியை தெரியுமா, தெரியாதா என்று ரஜினி முருகன் காமெடியில் ஒரு காட்சி வரும். அப்படி தான் இப்போது விக்னேஷ் சிவனை நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
தனுஷ் உடனான பிரச்சனைக்கு பிறகு விக்னேஷ் சிவன் தொடர்ந்து நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
பான் இந்தியா இயக்குனர்களின் பேட்டியில் கலந்து கொண்டது முதல் நயன்தாரா வலைப்பேச்சு சேனலை சேர்ந்தவர்களை விமர்சித்தது வரை பிரச்சனை தான்.
அஜித் பற்றி அந்த பேட்டியில் விக்னேஷ் சிவன் பேசியது நெட்டிசன்கள் பெரிய அளவில் ட்ரோல் ஆக்கினார்கள்.
விக்கியை நச்சரிக்கும் நெட்டிசன்கள்!
இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் ட்விட்டர் அக்கவுண்ட்டை டிஆக்டிவேட் செய்தது எல்லோருக்குமே தெரியும்.
தற்போது விக்னேஷ் சிவன் அதற்கு விளக்கமும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கொடுத்திருக்கிறார்.
அதேபோன்று பாண்டிச்சேரியில் இருக்கும் அரசு ஓட்டலை விளக்கி கேட்டார் என விக்னேஷ் சிவன் மீது புகார் வந்தது.
அதற்கு விளக்கம் கொடுத்ததோடு அதுபற்றி பாண்டிச்சேரி அமைச்சர் பேசிய வீடியோவையும் பகிர்ந்தார். தொடர்ந்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு ஆதாரத்தோடு விளக்கம் கொடுத்து வருகிறார்.
இதனால் நெட்டிசன்கள் அப்படியே நடிகை சோனா பிரச்சனைக்கும் விளக்கம் கொடுத்து விடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.
வலைப்பேச்சு சேனல் பிஸ்மி, இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்திற்கு முன் வரை சோனா வீட்டில் தங்கி இருந்து அவருக்கு தேவையான வேலையை செய்தார் என பேசி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இது பற்றி சோனாவிடம் ஒரு பேட்டியில் கேளுங்கள் அவர் முழு கதையும் சொல்லுவார் என்ற வேறு சொல்லி இருக்கிறார்.
இதை தற்போது நெட்டிசன்கள் பிடித்துக் கொண்டார்கள். இதற்கான விளக்கத்தையும் சொல்லிவிடுங்கள் விக்னேஷ் சிவன் என நச்சரித்து வருகிறார்கள்.