Memes: டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்களுக்கு பதட்டம் வந்துவிடும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்த மாதம்.
அதேபோல் புயல் மழை வெள்ளம் வந்தால் போதும் டிசம்பர் வந்துவிட்டது என தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த வருடம் தமிழகமே டிசம்பர் மாதத்தில் அவதிப்பட்டு வருகிறது.
தீபாவளிக்கு பிறகு தொடங்கிய மழை விட்டு விட்டு வந்து கொண்டிருக்கிறது. அதில் சமீபத்தில் பெஞ்சல் புயல் பல மாவட்டங்களை சூறையாடிவிட்டது.
அதிலிருந்து இப்போதுதான் வெளிவந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவும் பொறுக்காமல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடங்கிவிட்டது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் என செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். அடேய் டிசம்பர் எங்க கவலையே உன்ன நெனச்சு தான்டா. இன்னும் என்னெல்லாம் பண்ண போறியோ தெரியலையே என சிரிக்க வைக்கும் மீம்ஸ் தொகுப்பு இதோ.