Mahanadhi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா வீட்டிற்கு வந்த பிறகு விஜய் மற்றும் காவிரிக்கு இடையில் தேவையில்லாத விரிசல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ராகினி உடைய சதி தான். ராகினி விரித்த வலையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் அளவிற்கு காவிரி ஒவ்வொரு நொடியும் ரண வேதனையை அனுபவிக்கிறார்.
அதாவது வெண்ணிலாவை பார்த்த சந்தோஷத்தில் விஜய் இருந்தாலும் அவளுடைய நிலைமை தற்போது கொஞ்சம் கவலைக்கிடமாக இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். அந்த வகையில் வெண்ணிலாவை பழையபடி கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் எடுக்க முயற்சி எடுத்து வருகிறார்.
ஆனால் வெண்ணிலாவுக்கு ஒதுக்கும் நேரத்தில் காவிரியை கண்டுகொள்ளாமல் விட்டதால் ராகினி அந்த ஆட்டத்திற்குள் புகுந்து விஜய் மற்றும் காவிரி இருவரும் போனில் பேசிக் கொள்ள முடியாத அளவிற்கு சதி செய்து விட்டார். இதை கண்டுபிடிக்க முடியாத காவிரி, விஜய் நம்மளை கண்டுகொள்ளவில்லை.
இனி அவ்வளவுதான் விஜய்க்கு நம் தேவை இல்லை என்று சில விஷயங்களை தவறாக எடுத்துக் கொண்டார். ஆனால் விஜய், வெண்ணிலாவுடன் ஹாஸ்பிடலில் இருக்கும் பொழுது எப்பொழுதுமே காவிரி நினைப்பில் தான் இருந்திருக்கிறார். அத்துடன் ஆபீஸில் பிரச்சினை என்று சொல்லிய பொழுது கூட நான் வீட்டிற்கு போய் முதலில் என் மனைவி காவிரியை பார்த்து பேசிவிட்டு தான் வருவேன் என்று சொல்லி வீட்டிற்கு கிளம்பி விட்டார்.
ஆனால் விஜய் வீட்டிற்கு போன நேரத்தில் காவேரி ஆபீஸ்க்கு போய் எல்லா பிரச்சினையும் சரி செய்து விட்டார். பிறகு விஜய் ஆபீஸ்க்கு போன நேரத்தில் காவேரி, விஜயை தேடி ஹாஸ்பிடல் போய்விட்டார். ஆக மொத்தத்தில் இரண்டு பேரும் கண்ணாமூச்சி விளையாடு தான் விளையாடுகிறார்கள் என்பதற்கு ஏற்ப வெண்ணிலா வந்த பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்காமல் பேசிக்கொள்ள முடியாத அளவிற்கு சதியில் மாட்டிக் கொண்டார்கள்.
மேலும் காவிரி, ஹாஸ்பிடலுக்கு போன நிலையில் அங்கு இருக்கும் நர்ஸ் வெண்ணிலாவின் கணவர்தான் விஜய் என்ற தவறாக புரிந்து கொண்டு அதை காவிரிடம் சொல்கிறார்கள். இதை கேட்டதும் காவிரி சுக்கு நூறாக உடைந்து அழ ஆரம்பித்து விடுகிறார். அடுத்ததாக விஜய், ஆபீஸ்க்கு போன நிலையில் காவிரி வந்து எல்லா பிரச்சினையும் சரி செய்து விட்டாங்க என்று பெருமையாக பேசிய நிலையில் விஜய்க்கு ஹாஸ்பிடல் இருந்து போன் பண்ணி வெண்ணிலாவை பார்க்க கூப்பிடுகிறார்கள்.
அப்படி விஜய் ஹாஸ்பிட்டலுக்கு வந்து வெண்ணிலாவே பார்க்கும் பொழுது போன் பேசிக் கொண்டே போனதால் அங்கே காத்துக் கொண்டிருந்த காவிரியை கண்டுகொள்ளாமல் போய்விட்டார். இதை பார்த்த காவேரி, விஜய்க்கு மற்றவர்களிடம் போன் பேசலாம் நேரம் இருக்கிறது என்னிடம் மட்டும் பேச அவருக்கு பிடிக்கவில்லை என்று தவறாக புரிந்து கொண்டார்.
ஆக மொத்தத்தில் இந்த பிரச்சனையை எல்லாம் சரி செய்யும் விதமாக விஜய் எடுக்கப் போக முடிவு வெண்ணிலாவே ஹாஸ்பிடலில் வைத்து பார்ப்பதற்கு ஒரு நர்சை தேர்வு செய்து காவேரிடம் இதைப் பற்றி முழுமையாக மனசு விட்டு பேசி விஜய் ஒரு முடிவை எடுக்கப் போகிறார். அத்துடன் இடையில் புகுந்து ராகினி செய்த சதியையும் கூடிய சீக்கிரத்தில் காவிரி மற்றும் விஜய் கண்டுபிடிக்க வேண்டும்.