வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

சிங்கப்பெண்ணில் போட்டியில் ஜெயித்து காதலில் தோற்கும் ஆனந்தி.. நிலை குலையும் அன்பு?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

7 லட்சம் பரிசை எப்படியாவது ஜெயித்து அக்காவின் கல்யாணத்தை நடத்த ஆனந்தி போராடிக் கொண்டிருக்கிறாள்.

ஆனந்தியை ஹவுஸ் கீப்பிங்கில் இருந்து மாற்றி டெய்லர் ஆக வேண்டும் என்பதுதான் அன்புவின் ஆசை. ஆனந்தியின் அக்கா கல்யாணத்தை பற்றி அவள் அப்பா மூலம் மகேஷ் தெரிந்து கொள்கிறான்.

நேரடியாக உதவி செய்தால் சரியாக இருக்காது என்று எண்ணி தான் இந்த ஏழு லட்சம் பரிசையே அறிவித்திருக்கிறான்.

போட்டியில் ஜெயித்து காதலில் தோற்கும் ஆனந்தி

நேற்று ஒரு மணி நேரத்தில் ஆனந்தி 62 பீஸ் துணிகளை தைத்து இருப்பதாக அன்பு சொல்லி இருந்தான். இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி போட்டியில் ஜெயித்தது போல் காட்டப்படுகிறது.

பரிசுத்தொகையை மித்ரா மற்றும் கருணாகரன் கையால் மகேஷ் கொடுக்க வைக்கிறான். அதே நேரத்தில் ஹாஸ்டல் வார்டன் ஆனந்தியிடம் நீ ஜெயிக்கும் பொழுது தான் ரொம்ப உஷாராக இருக்க வேண்டும்.

உன் காலை வாரி விட நிறைய திட்டம் நடக்கும் என மித்ராவை குறிப்பிட்டு சொல்கிறார். ஏழு லட்சம் பரிசை வென்றதும் ஆனந்திக்கு அக்காவின் கல்யாணம் நடந்துவிடும் என்ற சந்தோஷம் தான் அதிகமாக இருக்கிறது.

அதே நேரத்தில் கோகிலா கல்யாணத்தின் போது மகேஷ் ஆனந்தியை திருமணம் செய்து கொள்ளப் போவதை பற்றி அழகப்பனிடம் பேச இருக்கிறான்.

அது மட்டும் இல்லாமல் கோகிலாவை பெண் பார்த்து போனவர்கள் வரதட்சணையில் கொஞ்சம் பேராசை படுவது போலவும் காட்டப்பட்டிருக்கிறது.

இதனால் கோகிலாவின் திருமணத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று தெரியவில்லை. பண பிரச்சனை என்று வந்துவிட்டால் ஆனந்திக்கு மகேஷ் மட்டும்தான் உதவ முடியும்.

உதவியும் செய்துவிட்டு அழகப்பனிடம் பெண் கேட்டால் அவர் கண்டிப்பாக சரி என்று தான் சொல்லப் போகிறார்.

இதைத் தாண்டி ஆனந்தி தன்னுடைய காதலை பற்றி வெளியில் தைரியமாக சொல்வாளா என தெரியவில்லை.

அதே நேரத்தில் மகேஷ் பண உதவி செய்வதால் கண்டிப்பாக அன்பு நிலைகுலைந்து போகவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Trending News