Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் வாங்க நினைக்கும் புது வீட்டிற்கு ரோமையா என்ற பெயர் வைத்தாச்சு. அத்துடன் அந்த வீட்டில் பேய் பிசாசு ஏதாவது இருக்கா என்று மந்திரவாதி கூட்டிட்டு செக் பண்ணியும் பார்த்து விட்டார்கள். அப்படி எதுவும் இல்லாததால் ரிஜிஸ்ட்ரேஷனே பண்ணலாம் என்று அடுத்த கட்ட முயற்சியாக 2 கோடி 70 லட்ச ரூபாய் பேங்கில் லோன் வாங்குவதற்கு மனோஜ் பேங்க் மேனேஜரிடம் பேசி இருக்கிறார்.
அது விஷயமாக பேங்கில் இருந்து இரண்டு நபர்கள் மனோஜ் வாங்க போகும் வீட்டிற்கு வந்து பேசுகிறார்கள். அவர்கள் எல்லாத்தையும் செக் பண்ணி பார்த்த பிறகு 2 கோடிக்கு லோன் ஈசியாக கிடைத்துவிடும் மீதி பணத்துக்கு நீங்கள் ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கோங்க என்று சொல்லி கிளம்பி விட்டார். உடனே ரோகிணி, மனோஜிடம் மீதி பணத்துக்கு என்ன பண்ண என்று கேட்கிறார்.
அதற்கு மனோஜ் எனக்கு வேற ஒரு ஐடியா இருக்கிறது உள்ளே வா நான் சொல்கிறேன் என்று வீட்டிற்குள் போனதும் அண்ணாமலையிடம் நான் உங்களிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்று சொல்கிறார். அத்துடன் மற்றவர்கள் அனைவரையும் கொஞ்சம் வெளியே போய் இருங்கள் நான் அப்பாவிடம் பேச வேண்டும் என்று திமிராக சொல்கிறார்.
உடனே அண்ணாமலை நாம் எல்லாம் ஒரே குடும்பம் எது பேசுவதாக இருந்தாலும் நீ அனைவரது முன்னாடியும் பேசலாம் என்று சொல்லிவிடுகிறார். அப்பொழுது மனோஜ் உங்களுக்கே தெரியும் எனக்கு லோன் ரெண்டு கோடிக்கு மட்டும் தான் ஓகே ஆகி இருக்கிறது. அதனால் மீதமுள்ள 70 லட்ச ரூபாய் பணம் நீங்க தான் எனக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
இதை கேட்ட அண்ணாமலை என்னிடம் ஏது அவ்வளவு பணம், அது உனக்கே தெரியும் என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், உங்களிடம் பணம் இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால் அதற்கு பதிலாக இப்பொழுது இருக்கும் வீட்டில் எனக்கும் பங்கு இருப்பதால் அதை எனக்கு பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று திமிராக கேட்க ஆரம்பித்து விட்டார்.
மனோஜ் இப்படி கேட்டதும் அங்கு இருப்பவர்கள் அப்படியே வாயடைத்து போய் விட்டார்கள். மேலும் அண்ணாமலை, அது உங்க அம்மாவுடைய அப்பா அவளுக்கு ஆசையாக கொடுத்தது. அந்த வீட்டையும் அவருடைய மகளையும் நல்லபடியாக பார்த்துக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்து என்னுடைய பெயரையும் சேர்த்து பத்திரத்தில் எழுதி வைத்தார்.
அதைத் தவிர எனக்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எது வேண்டுமானாலும் உன்னுடைய அம்மாவிடம் பேசிக்கோ என்று சொல்லிவிட்டார். ஆனால் விஜயா எதையும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில் அண்ணாமலை உனக்கு எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணும் உன்னுடைய அம்மாவை இப்பொழுது வாயை திறக்காமல் இருக்கிறார் என்றால் அவளுக்கும் இதில் சம்மதம் இல்லை என்று தான் அர்த்தம் என்று சொல்கிறார்.
அப்பொழுது மனோஜ், விஜயாவிடம் நீ ஏன் அமைதியாக இருக்கிறாய் எனக்காக இந்த உதவியை பண்ண மாட்டியா என்று கேட்கிறார். உடனே முத்து மற்றும் ரவி உன்னுடைய சுயநலத்திற்காக அந்த வீட்டை பிரிக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம். எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்று சொல்லிய நிலையில் உங்களுடைய சம்மதம் எனக்கு தேவையில்லை அம்மா எனக்காக ஓகே சொல்லுவாங்க என்று விஜயாவிடம் கேட்கிறார்.
அதற்கு விஜயா, அந்த வீட்டை கொடுத்து விட்டால் நான் என்ன பண்ணுவது அதனால் வீட்டை பங்கு கேட்பதை விட்டு விடு என்று சொல்கிறார். உடனே மனோஜ் வாங்க போவது உன்னுடைய வீடு தானமா? அப்புறம் என்ன யோசிக்கிறாய் என்று கேட்ட பொழுது முத்து அவர்கள் வீட்டில் அவர்கள் நிம்மதியாக இருந்துட்டு போறாங்க. கூட்டிட்டு ஒரு நாலு நாளைக்கு நல்லா பாத்துப்ப, அதுக்கப்புறம் வேலைக்காரங்க மாதிரி அவங்கள இதை பண்ணு அதை பண்ணு என்று அதிகாரம் பண்ண ஆரம்பித்து விடுவாய்.
இதெல்லாம் அவங்களுக்கு தேவையே இல்லை அவங்க வீட்டில் அவங்க சந்தோசமாக இருந்துட்டு போகட்டும். உன்னால் முடிந்தால் இந்த வீட்டை வாங்கு இல்லேன்னா வேற ஏதாவது யோசி என்று முத்து சொல்லுகிறார். இப்படி வாக்குவாதம் ஆரம்பித்த நிலையில் முத்து, திடீரென்று ரோகினி அப்பாவிடம் கேட்கலாம் என்று சொல்லிய நிலையில் அனைவரும் ரோகிணியை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
ரோகிணி இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தோழி வித்யாவிற்கு ஃபோன் பண்ணி மாமாவிடம் பேசும் படி டிராமா பண்ணி விட்டார். அதன்படி மாமா மற்றும் அப்பா இப்போது உதவி பண்ண முடியாது என்று ரோகினி கையை விரித்து விட்டார். உடனே மனோஜ் மறுபடியும் விஜயாவிடம் கேட்ட பொழுது விஜயாவும் என்னாலும் அந்த வீட்டை கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
மனோஜின் ஆசை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை அதை என் வீட்டு மூலமாக நான் நிறைவேற்ற மாட்டேன் என்று மனோஜின் ஆசைக்கு விஜயா குறுக்கே வந்துவிட்டார். இதனால் எதுவும் பேச முடியாமல் அப்படியே ரோகினையும் அடங்கி போய்விட்டார். இருந்தாலும் ரோகிணி மற்றும் மனோஜ் மீதி பணத்தை வேறு விதமாக ரெடி பண்ணி ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கு போய்விடுவார்கள்.
ஆனால் அங்கு ஏமாற்றும் கும்பல் வராமல் பெரிய நாமத்தை போடப் போகிறார்கள். இதன் மூலம் முத்து, ரோகிணி மனோஜ் மற்றும் விஜயா ஆடிய ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எல்லா உண்மையும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் போட்டு உடைக்க போகிறார். ஜீவா வந்த பிறகு ரோகிணி மற்றும் மனோஜின் ஆட்டம் மொத்தமாகவே அடங்கிவிடும்.