சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தங்கமயில் தலையில் மண்ணை அள்ளிப் போட வந்த அப்பா.. கதிரிடம் மாட்டப் போகும் பாண்டியனின் சம்மந்தி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் தன்னுடைய பேச்சை கேட்காமல் வேலைக்கு போனதும், செந்தில் வாய்க்கு வந்தபடி பேசியதால் பாண்டியன் மனசு கஷ்டப்பட்டு விட்டது என்று நினைத்து கோமதி பீல் பண்ணியதால் வீட்டிற்கு வந்த மூன்று மருமகள்களையும் குற்றவாளி போல் பேசி அவர்கள் மனதை காயப்படுத்தி விட்டார்.

இருந்தாலும் அவர்கள் அடுப்பங்கரையில் போய் சமைக்கும் பொழுது எதுவும் பேசாமல் சமைத்த நிலையில் அரசி அங்கிருந்து வந்து என்ன பிரச்சனை என்று கேட்கும் பொழுது மீனாவின் ஆதங்கத்தை கொட்டும் விதமாக மனதில் இருக்கும் பாரத்தை வெளிப்படுத்துகிறார். அப்பொழுது கோமதி, மீனா பேசியது எல்லாமே சரிதான் என்று மருமகளிடம் சரண்டர் ஆகி விடுகிறார்.

நான் ஏதோ கோபத்தில் பேசி விட்டேன் உங்க அம்மா ஏதாவது உங்களை சொல்லியிருந்தால் அவர்களிடம் இப்படி தான் கோபப்பட்டு இருப்பீர்களா? அதே மாதிரி என்னையும் அம்மாவா நினைச்சுக்கோங்க என்று சொல்லி மூன்று மருமகளையும் கோமதி சமாதானப்படுத்தி விட்டார். அடுத்ததாக ராஜி, கதிர் பற்றி நினைப்பில் இருக்கும் பொழுது கதிருக்கு போன் பண்ணி பார்க்கலாம் என்று இரவு நேரத்தில் கால் பண்ணுகிறார்.

ஆனாலும் சின்ன ஒரு நெருடல் இருப்பதால் போனை கட் பண்ணி விடுகிறார். உடனே கதிர், ராஜி கால் பண்ணி இருப்பதை பார்த்து திரும்பக் கூப்பிட்டு பேசுகிறார். அப்பொழுது இருவரும் அக்கறையாகவும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பேசிக்கொள்கிறார்கள். இதனை அடுத்து தங்கமயில், அவங்க அப்பாக்கு போன் பண்ணி எனக்கு பயமாக இருக்கிறது நிச்சயம் நீங்கள் சொன்னபடி இன்னைக்கு செய்யணுமா என்று கேட்கிறார்.

அதற்கு தங்கமயிலின் அப்பா, ஆமாம் இன்றைக்கு ஒரு நாள் கஷ்டப்பட்டு விட்டால் உன்னுடைய போலி நகைக்கும், சர்டிபிகேட்டுக்கு முடிவு கட்டிவிடலாம். அதனால் நீ எதை நினைத்தும் பயப்பட தேவையில்லை எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கதவை மட்டும் லாக் போடாமல் வைத்திரு நான் திருடன் போல் வந்து உன்னுடைய போலி நகையும் சர்டிபிகேட்டையும் திருடிட்டு போய்விடுகிறேன் என்று சொல்லிவிட்டார்.

அதன்படி எல்லாரும் தூங்கிய நிலையில் தங்கமயில் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்க போய் விடுகிறார். ஆனாலும் பயத்தில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிப்பதால் தூக்கம் இல்லாமல் உட்கார்ந்திருக்கிறார். பிறகு வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் பழனிச்சாமி தண்ணீர் குடிப்பதற்காக எழுந்திரிக்க நிலையில் கதவு திறந்து இருப்பதை பார்த்து அதை லாக் போட்டுவிட்டு தூங்கப் போய் விடுகிறார்.

இது தெரியாமல் தங்கமயிலின் அப்பா கதவு திறந்து இருக்கிறது என்று யாருக்கும் தெரியாமல் முக்காடு போட்டுக்கிட்டு கதவை தள்ளுகிறார். ஆனால் பூட்டி இருக்கிறது என்பதால் தங்கமயிலுக்கு போன் பண்ணி கதவை திறந்து வைக்க சொன்னமில்ல, ஏன் பூட்டி இருக்கு என்று கேட்கிறார். உடனே தங்கமயில் நான் திறந்து வைத்துவிட்டு தான் வந்தேன் என்று சொல்லிய நிலையில் நீ பதட்டத்தில் சரியாக பண்ணியிருக்க மாட்டாய்.

இப்பொழுது நான் உன் வீட்டு வாசலில் தான் இருக்கிறேன் யாருக்கும் தெரியாமல் கதவை திறந்து விடு என்று கூப்பிடுகிறார். தங்கமயிலும் அதிக ரிஸ்க் எடுத்து யாருக்கும் தெரியாமல் கதவை திறந்து விட்டு அப்பாவிடம் பார்த்து கவனமாக பண்ணுங்கப்பா. மாட்டிக்கொண்டால் பெரிய அவமானமாக போய்விடும் என்று சொல்லி ரூம்குள் போய்விடுகிறார். உடனே தங்கமயிலின் அப்பா திருடன் போல் வீட்டிற்குள் வந்த நிலையில் அங்கே இருந்த ஒரு பூச்செண்டு கீழே விழுகிறது.

அந்த சத்தத்தை கேட்டு பழனிச்சாமியும் முழித்து விடுகிறார், ஆனால் நிச்சயம் பழனிச்சாமி கண்ணில் இருந்து தங்கமயில் அப்பா தப்பித்து விடுவார். ஆனால் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு இரவு நேரத்தில் திரும்ப வரும் கதிர் கண்ணில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஏதோ ஒன்று இரண்டு பொய்யும் பித்தலாட்டங்களையும் பண்ணி இருந்தாலும் தங்கமயில் அதில் மாட்டாமல் சமாளித்துக் கொண்டு வந்தார்.

ஆனால் தற்போது தங்கமயிலின் அப்பா எடுத்த ரிஸ்கால் பாண்டியன் குடும்பத்தில் அவமானம் பட்டதோடு மட்டுமில்லாமல் தங்கமயில் வாழ்க்கையும் சூனியம் ஆகிவிடும் போல. அந்த அளவிற்கு தங்கமயிலின் தலையில் மண்ணை வாரி போடும் அளவிற்கு தங்கமயிலின் அப்பா சம்பவத்தை செய்ய தயாராகி விட்டார்.

Trending News