Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா, இந்த கோபி எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டார் என்று முடிவு எடுத்த நிலையில் இனி அந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஓனருக்கு போன் பண்ணி நாங்கள் இன்னும் இரண்டு நாட்களில் வீட்டை காலி பண்ணி விடுகிறோம் என்ற தகவலை கொடுத்து விடுகிறார். இதனால் அந்த வீட்டின் ஓனர், கோபிக்கு போன் பண்ணி என்ன திடீரென்று வீடு காலி பண்ணுறீங்க.
எதுவாக இருந்தாலும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கணும்னு அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட்டு இருக்கீங்க. அப்படி போவதாக இருந்தால் இரண்டு மாத வாடகை கொடுத்து விட்டு போகணும் என்று சொல்லிய நிலையில் கோபிக்கு இது பற்றி எதுவும் தெரியாததால் நான் ராதிகாவிடம் பேசிட்டு உங்களிடம் பேசுகிறேன் என்று கோபி போனை கட் பண்ணி விடுகிறார்.
உடனே ராதிகாவுக்கு போன் பண்ணி நீ ஏன் வீட்டை காலி பண்ண வேண்டும். என்னிடம் இதைப் பற்றி கேட்காமல் நீ தனியாக எப்படி முடிவெடுத்தாய். எதனாலும் நேரடியாக பேசிக்கொள்ளலாம் என்று இப்பொழுதே கிளம்பி வீட்டுக்கு வா என்று ராதிகாவை கூப்பிட்டுவிட்டார். ராதிகாவும் நேரடியாக போய் சொல்லலாம் என்று பாக்யா வீட்டிற்கு போன நிலையில் கோபி மற்றும் ராதிகாவுக்கு இடையே வாக்குவாதம் வருகிறது.
உடனே கோபி மறுபடியும் நெஞ்ச பிடிச்சு கீழே சாஞ்சி விட்டார். இது என்னடா செத்து செத்து விளையாடுற பொழப்பா போச்சு என்பதற்கு ஏற்ப ஆவுனா நெஞ்சுவலி என்று ஒரு சீன் கிரியேட் பண்ணி விடுகிறார். இதனால் பயந்து போன ஈஸ்வரி மற்றும் செழியன், கோபியை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போய் விடுகிறார்கள். போன இடத்தில் ஈஸ்வரி, சும்மா இல்லாமல் ராதிகாவை பற்றி தவறாக கோபியிடம் சொல்லி வத்தி வைக்கிறார்.
கோபிக்கு நெஞ்சுவலி வந்ததை பார்த்ததும் ராதிகா துடித்துப் போய்விட்டார். உடனே பாக்யா வீட்டில் நின்று கோபி வந்ததுக்கு அப்புறம் விசாரித்துவிட்டு போகலாம் என்று ராதிகா காத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா, ராதிகாவிடம் நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் எங்கள் குடும்பத்தில் உள்ள நிம்மதியை போய்விட்டது. தயவு செய்து எங்க அப்பாவை விட்டு விலகி விடுங்க என்று சொல்லியதால் பாக்கியா, இனியா கன்னத்தில் பளார் என்று ஒரு அறையை போட்டு விட்டார்.
அப்பொழுது கோபியை கூட்டிட்டு ஈஸ்வரி மற்றும் செழியன் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். கோபியை பார்த்ததும் ராதிகா பேசுவதற்கு முயற்சி எடுக்கிறார். ஆனால் ஈஸ்வரி பேச விடாமல் தடுத்து ரூம்குள் கூட்டிட்டு போய் கதவை சாத்தி விடுகிறார். வெளியே வந்த செழினிடம் கோபியை பற்றி ராதிகா விசாரிக்கிறார். அப்பொழுது அங்கிருந்து வந்த ஈஸ்வரி, நீ வந்ததற்கு பிறகுதான் என்னுடைய மகனின் எமனாக இருக்கிறாய். உன்னிடம் குடும்பம் நடத்த பிடிக்காமல் தான் அவன் இங்கு வந்து இருக்கிறான்.
அது தெரியாமல் நீ தினமும் இங்கே வந்து அவனுடைய நிம்மதியே கெடுத்தால் எப்படி. தயவு செய்து இந்த வீட்டுக்கு இனி வந்து விடாத, வந்தா கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுவேன் என்று அவமானப்படுத்தி பேசி ராதிகாவை வெளியே அனுப்பி விட்டார். இவ்வளவு தூரம் நடந்ததுக்கு பிறகும் பாக்கியா அங்கே எதுவும் பேசாமல் டம்மியாகத்தான் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்.
இருந்தாலும் ஈஸ்வரிடம், நியாயத்திற்காக பேசும் பொழுது ஈஸ்வரி எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் பாக்யாவை ஓரம் கட்டி விட்டார். இந்த கோபியை நம்பியதற்கு பாக்யா மட்டும் இல்லாமல் தற்போது ராதிகாவும் ஒவ்வொரு நாளும் ரண வேதனையை அனுபவித்து தான் வருகிறார். ஆக மொத்தத்தில் ராதிகா மற்றும் பாக்யா, இந்த கோபியை எங்களுக்கு வேண்டாம் என்று தலை தெறித்து ஓட போகிறார்கள்.