Memes: வெற்றிமாறனின் விடுதலை 2 படம் இன்று வெளியாகி உள்ளது. இதற்காக ரசிகர்கள் வருட கணக்கில் தவம் இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் இப்படம் ஆரம்பத்தில் ஒரு பாகமாக தான் வெளியாக இருந்தது. ஆனால் போகப்போக அதை இரண்டு பாகமாக மாற்றிவிட்டார் வெற்றிமாறன்.
அதன்படி முதல் பாகம் கடந்த வருட தொடக்கத்தில் வெளிவந்தது. அதே போல் இரண்டாம் பாகம் சீக்கிரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதோ அதோ என்று இழுத்தடித்து இந்த வருட இறுதியில் தான் வந்திருக்கிறது. இதில் வெற்றிமாறன் பல காட்சிகளை திரும்ப சூட் செய்ததாக கூட பேசப்பட்டது.
இது எல்லாத்தையும் விட நேற்று இரவு தான் இவர் பட வேலைகள் மொத்தமும் முடிந்து விட்டது என ஒரு வீடியோவில் பேசியிருந்தார். நாளைக்கு பட ரிலீஸ் வைத்துக்கொண்டு கடைசி நேரம் வரை அவர் வேலை பார்த்துள்ளார்.
இது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அதில் வெற்றிமாறன் தியேட்டர் ஓனர்களிடம் முதல் பாதியை போட்டு விடுங்க.
இரண்டாவது பாதி டப்பிங் வேலைய முடிச்சுட்டு கொடுக்கிறேன் என சொல்வது போல் மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதேபோல் படத்தில் பல அரசியல் வசனங்கள் இருக்கிறது.
அதன் மூலம் விஜய்யை மறைமுகமாக தாக்கி இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். ஒருவேளை இந்த டயலாக் போன மாசம் தான் யோசித்து இருப்பாரோ.
இல்ல படம் ஆரம்பிக்கும் போதே எழுதி இருப்பாரோ என பல மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது. இப்படி விடுதலை 2 சம்பந்தப்பட்ட சிரிக்க வைக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.