என்னது தலைய மட்டும் தனியா ஒட்ட வச்ச மாரி இருக்கு.. விடாமுயற்சியில் இணைந்த விஜய் டிவி பிரபலம், லைக்கா கொடுத்த அப்டேட்

Vidaamuyarchi: வருட கணக்காக இழுத்தடித்து வந்த விடாமுயற்சி ஒரு வழியாக 2025 பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. சமீபத்தில் இதன் அறிவிப்பை லைக்கா வெளியிட்டது.

ajith-ramya
ajith-ramya

அதை அடுத்து அஜித் ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பில் இருக்கும் போட்டோவும் வெளியானது. அதே போல் திரிஷாவின் கரம்பிடித்தபடி இருக்கும் போட்டோவும் வைரலானது.

இந்நிலையில் தற்போது மற்றொரு அப்டேட்டை லைக்கா வெளியிட்டுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி தொகுப்பாளினியான ரம்யா இணைந்துள்ளார்.

அஜித் பட்டு வேட்டி சட்டையில் இருக்க அவருக்கு அருகில் ரம்யா புடவையில் கை கூப்பியபடி நிற்கிறார். இதை பார்க்கும் போது ஏதோ திருமண விழா போன்று தெரிகிறது.

விடாமுயற்சியில் இணைந்த விஜய் டிவி பிரபலம்

படம் வெளியாவதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதுவரை ஏதாவது ஒரு போட்டோவை போட்டு அப்டேட் கொடுக்குறீங்களே, எங்களுக்கு ஒண்ணுமே புரியல என ரசிகர்கள் இதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

அதேபோல் இந்த போட்டோவை பார்த்தால் தலையை மட்டும் தனியா எடுத்து ஒட்ட வச்ச மாதிரி இருக்கு. என்ன லைக்கா இதெல்லாம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எது எப்படியோ அஜித்தின் உடல் எடை குறைந்த லுக் வழக்கம் போல அசத்தலாகவே இருக்கிறது. அதை அவரின் வெறியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment