Memes: சோசியல் மீடியாவில் இப்போது எல்லோரும் ஆக்டிவாக இருக்க தொடங்கிவிட்டனர். ஒரு சின்ன விஷயம் சர்ச்சையானால் கூட அதை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி விடுகின்றனர்.
அதேபோல் ஒரு படம் வெளியானால் அதை ஆக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து விடுகின்றனர். விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்தாலும் மீம்ஸ் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
அப்படித்தான் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 வெளியானது. ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்த இப்படம் அந்த அளவுக்கு ஒர்த்தா என்று கேட்டால் கேள்விக்குறி தான்.
சிலருக்கு அப்படம் பிடித்திருக்கிறது சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் அதிகபட்ச பில்டப் படத்தில் இருக்கிறது என்ற பொதுவான விமர்சனங்களும் ஒரு பக்கம் இருக்கிறது.
இதை நெட்டிசன்கள் தங்கள் ஸ்டைலில் கிண்டலடித்து வருகின்றனர். நீங்க 3வது பாகம் எடுங்க வேண்டான்னு சொல்லல ஆனா மூணு மணி நேரத்துக்குள்ள எடுங்க.
இவ்வளவு நீளமா படம் இருந்தா ரெண்டு தடவை இன்டர்வல் விடுவீங்களா, அதுக்கும் சேர்த்து பாப்கார்ன் வாங்கணுமான்னு குழப்பமா இருக்கு என இணையவாசிகள் அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.
இன்னும் சிலர் புஷ்பா 2 படம் பாக்க போறேன் புளி சாதம் கட்டிட்டு போயிட வேண்டியது தான் என பங்கம் செய்து வருகின்றனர்.
இதையெல்லாம் தாண்டி படத்தில் ஹீரோ செம்மரக்கட்டை கடத்துறார். ஆனால் அவர பிடிக்கப் போற போலீஸ் வில்லன் என்னங்கடா உங்க நியாயம் என புஷ்பா 2 படத்தை கிண்டலடித்து வருகின்றனர்.
இப்படி இணையத்தை கலக்கும் சில நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.