Gossip: சமீபகாலமாக கோலிவுட் பிரபலங்களுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. அடுத்தடுத்து விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் இந்த வருடம் ரொம்ப மோசம்.
நாம் எதிர்பார்க்காத பிரபலங்கள் எல்லாம் திருமணம் முறிவு என அறிக்கை விடுகின்றனர். இது சோசியல் மீடியாவையே ஒரு வழியாக்கி இருந்தது.
யார் பக்கம் தவறு, பிரச்சினை என்ன, இதற்கு யார் காரணம் என ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்தை கிளப்பி விட்டனர். அதில் ஜெயமான நடிகர் மனைவியை பிரிந்தது முன்பே செய்தியாக கசிந்தது.
ஆனால் இசை ஜோடியின் பிரிவு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்த இந்த ஜோடி தற்போது பிரிந்துள்ளனர்.
மனைவியுடன் இணைய தயாராகும் நடிகர்
இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வரை அமைதி காத்து வருகின்றனர். அது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சம்பவம் நடந்தது.
சமீபத்தில் நடிகர் நடத்திய கச்சேரியில் மனைவியும் கலந்து கொண்டார். அப்போது இந்த ஜோடி மீண்டும் இணைய கூடாதா என ரசிகர்களுக்கு ஒரு ஏக்கமே வந்தது.
அதையடுத்து சமீபத்தில் நடந்த விழாவில் கூட இருவரும் கலந்து கொண்டனர். அப்போது மனைவி நடிகரின் வளர்ச்சியை பார்த்த சந்தோஷத்தில் இருந்தார்.
இதனால் கூடிய விரைவில் இவர்கள் இணைவார்கள் என்ற செய்தி கசிந்துள்ளது. சில சினிமா பிரபலங்கள் கூட அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அது மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கும் சந்தோஷம்தான். தற்பொழுது குடும்பத்தினர் கூட இருவரையும் சேர்த்து வைக்க பேசி வருவதாக கூறப்படுகிறது.