Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் 2 கோடி ரூபாய் பேங்கில் லோன் வாங்குகிறார். மீதி தேவைப்படும் 70 லட்சம் நீங்கதான் தரவேண்டும் என்று அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் மனோஜ் கேட்டார். ஆனால் அதற்காக எங்களுக்குன்னு இருக்கிற ஒரு வீட்டை பிரிக்க முடியாது என்று இருவருமே மனோஜிடம் முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
மனோஜ் இப்படி சுயநலமாக கேட்ட விஷயத்தை சுருதி மற்றும் ரவி இருவரும் பேசிக் கொள்கிறார்கள். மனோஜ் இவ்வளவு சுயநலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் உங்க அண்ணன் முத்துவை தான் தவறாக நினைத்தேன். ஆனால் அவர் படிக்கவில்லை என்பதால் தான் பேச்சு கொஞ்சம் முன்னும் பின்னமாக இருக்கிறது தவிர மற்றபடி அவர் ரொம்ப நல்லவர் என புரிந்து கொண்டேன்.
ஆனால் மனோஜ் படிச்சு படிப்பறிவு பட்டத்தை வாங்கி இருந்தாலும் அவர் ஒரு ஜீரோ தான். அதுவும் ரோகிணி இருக்கப் போய் தான் ஓரளவுக்கு உங்க அண்ணன் இப்போ முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்று சுருதி, ரவியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ரோகிணி மற்றும் மனோஜ் வந்துவிட்டார்கள். உடனே சுருதி பேசுவதை நிறுத்திவிட்டார்.
அப்பொழுது அங்கே வந்த மனோஜ், ரவியிடம் எனக்கு பணத்தை கொடுத்து உதவி பண்ணு என்று கேட்கிறார். ரவி என்னிடம் பணம் ஏது, அவ்வளவு பணம் இருந்தால் நான் சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஓப்பன் பண்ணி இருக்க மாட்டேனா என்று சொல்கிறார். உடனே மனோஜ் உன்னிடம் அவ்வளவு பணம் இருக்காது என்று எனக்கு தெரியும், ஆனால் நீ உன்னுடைய மாமனாரிடம் கேட்டு வாங்கி தா என சொல்கிறார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான ரவி மற்றும் சுருதி, எப்படி அவங்க கிட்ட போய் பணம் வேண்டும் என்று கேட்க முடியும். நான் எதற்காகவும் என்னுடைய மாமனார் மாமியார் வீட்டில் பணம் கேட்டு நிற்கக்கூடாது. கௌரவமாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று என்னால் முடிந்த வரை ஒரு வேலையை பார்த்து வருகிறேன் என்று ரவி சொல்லிவிட்டார்.
உடனே ரோகிணி, சுருதியிடம் நீங்களாவது உங்க அப்பாவிடம் கடனாக பணத்தை வாங்கி கொடுங்கள். அதற்கு வட்டி கொடுத்து பணத்தை சீக்கிரமாக திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று ரோகினி சொல்கிறார். உடனே சுருதி, அதெல்லாம் என்னுடைய கௌரவப் பிரச்சினை, அவங்க கிட்ட என்னுடைய பங்கை கேட்டு கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவங்க எனக்கு ஒரு நல்ல படிப்பை கொடுத்து சுயமாக சம்பாதித்து காட்ட தைரியத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.
அதனால் என்னாலையும் என்னுடைய குடும்பத்தில் போய் பணம் கேட்க முடியாது என்று சொல்லிய நிலையில் மனோஜ், என்னுடைய தகுதியை விட்டுட்டு மாத சம்பளம் வாங்கும் உங்களிடம் பணத்தை கேட்டோம்ல எனக்கு இது தேவை தான் என்று சொல்லி கோவமாக பேசி விடுகிறார். உடனே இதுதான் சான்ஸ் என்று ரோகிணி, மனோஜ்க்கு யாரும் இல்லை என்றாலும் நான் கூடவே இருப்பேன் என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசி ஐஸ் வைத்து விடுகிறார்.
அடுத்ததாக முத்துவுக்கு ஜீவா போன் பண்ணி பிக்கப் பண்ண கூப்பிடுகிறார். முத்துவும் ஜீவாவை பிக்கப் பண்ணிட்டு ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு போகிறார். அப்படி போகும் பொழுது இருவரும் பேசிய நிலையில் ஜீவா கடைசி முறை நான் வந்திருக்கும் பொழுது இரண்டு பேர் என்னை ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டார்கள். அதனால் வந்த வேலை முடியவில்லை இந்த முறை வந்த வேலை முடிந்து விட்டால் உடனே கிளம்பி விடுவேன் என்று பேசுகிறார்.
ஆனால் அப்பொழுது அந்த ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு மனோஜ் மற்றும் ரோகிணி வீட்டை தன்னுடைய பெயருக்கு ரிஜிஸ்டர் பண்ணுவதற்காக வந்திருக்கிறார்கள். அந்த வகையில் மீதம் தேவைப்பட்ட 70 லட்சம் பணத்தை சந்தோஷ் சார் கிட்டே வாங்கிக் கொண்டார்கள். ஆனால் அந்த ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு ஏமாற்று கும்பல் வராமல் மனோஜ் மற்றும் ரோகினிக்கு பெரிய நாமத்தை போட்டு விட்டார்கள்.
அந்த சமயத்தில் மொத்தமாக ஏமாந்து போன விஷயமும் முத்துவுக்கு தெரிய வந்து விடுகிறது. அதே மாதிரி அப்பாவின் பணத்தை ஆட்டைய போட்ட மனோஜ்க்கு திருப்பி அந்த பணம் கிடைத்துவிட்டது. அதை வைத்து தான் ஷோரூம் ஆரம்பித்து இருக்கிறார்கள். ரோகிணியின் அப்பா பணம் கொடுத்து உதவவில்லை என்பது முத்துவுக்கு தெரிய வந்து விடுகிறது.
இப்படி இரண்டு விஷயத்தால் ரோகினி மாட்டிக்கொண்டதால் முத்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் எல்லா உண்மையும் போட்டு உடைத்து ரோகினி முகத்திரையை கிழித்து விஜயா முகத்தில் கரியை பூசி விடுகிறார். அத்துடன் தன்னுடைய தகுதி தராதரம் கூடிவிட்டது என்று ஓவராக ஆடிய மனோஜின் ஆணவத்திற்கும் மொத்தமாக பெரிய அடி விழுந்து விட்டது.