சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

கோபியையும் பாக்யாவையும் ஒன்று சேர்த்து வைத்த இனியா.. ராதிகாவை ஓட ஓட விரட்டிய ஈஸ்வரி

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி சைக்கோ மாதிரி இருந்த பொழுதும் கோபியால் பாக்கியா ஒவ்வொரு நாளும் அவஸ்தை பட்டு பிரச்சினையை சந்தித்து இருந்தார். தற்போது கோபி நல்லவராக மாறி திருந்திய நிலையில் பாக்யா குடும்பத்துடன் சேர்ந்து கொண்டு ராதிகாவை கஷ்டப்படுத்திக் கொண்டு வருகிறார்.

ஆக மொத்தத்தில் இந்த கோபியால் கடைசி வரை ராதிகா மற்றும் பாக்யா அவஸ்தைப்படும் அளவிற்கு தான் இருக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது கோபியாக இருந்தாலும், தன் பிள்ளை என்ன பண்ணினாலும் அதை மறந்து தலையில் தூக்கி வைத்து ஆடும் ஈஸ்வரி மற்றும் அப்பா தப்பே செய்திருந்தாலும் எங்களுக்கு அவங்க தான் டாடி என்று உரிமை கொண்டாடி வரும் செழியன் மற்றும் இனியா இருக்கும் வரை இந்த கோபி முழுசா தெரிந்த வாய்ப்பே இல்லை.

அந்த வகையில் இப்பொழுது இனியாவிற்கு நடக்கும் டான்ஸ் போட்டி நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பாக்கியா குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக கிளம்பி விட்டார்கள். பக்கத்தில் இருக்கும் ராதிகா வீட்டிற்கு சென்று மயுவை பார்க்க முடியாத கோபி தூரமாக இருக்கும் இனியாவின் டான்ஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் முதல் ஆளாக கிளம்பி விட்டார். அதிலும் மயூவின் பிறந்தநாள் என்று ராதிகா சொல்லிருந்தும் அவளுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்ல கோபி முன்வரவில்லை.

இனியா ஆசைப்பட்ட மாதிரி கோபியை கூட்டிட்டு டான்ஸ் நிகழ்ச்சிக்கு போய்விட்டார். பின்னாடியே பாக்கியாவும் போன நிலையில் அங்கே அனைவரும் பார்க்க நினைத்த இனியாவின் டான்ஸ் நன்றாக இருந்ததால் முதல் பரிசை பெற்று விட்டார். உடனே இதுதான் சான்ஸ் என்று இனியா ஜெயித்த பின் மேடைக்கு கோபியையும் பாக்கியாவையும் ஒன்றாக கூப்பிட்டு விட்டார்.

அத்துடன் இவர்தான் என்னுடைய அப்பா அம்மா என்று பாக்கியா கோபியை பெருமையாக பேசி நன்றி சொன்னார். இதை டிவியில் இருந்து ராதிகா மற்றும் அவருடைய அம்மா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே இந்த பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத ராதிகாவின் அம்மா, நெனச்சது போல மாப்பிள்ளையே இந்த குடும்பம் அவங்க பக்கம் இழுத்துக் கொண்டாங்க.

இனி உன்னுடைய வாழ்க்கை என்னவாக இருக்கப்போகிறது என்று ராதிகாவிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார். பாவம் ராதிகாவும் எதுவும் பேச முடியாமல் தவித்து வருகிறார். காரணம் தற்போது கோபி, அம்மா மகளின் பாசத்தை பகடகாயாக வைத்து அங்கு இருப்பதால் ஈஸ்வரி இனியா என அனைவரும் ராதிகாவை ஓட ஓட விரட்டும் அளவிற்கு வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தி வருகிறார்கள்.

இதனால் ராதிகா யாரிடமும் சொல்லாமல் மயுவை கூட்டிட்டு போகப் போகிறார். அதே மாதிரி பாக்கியாவும் கோபியை விரட்டும் நிலையில் யாருமே இல்லாமல் தன்னந்தனையாக கோபி நிற்கப் போகிறார்.

Trending News