ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விடுதலை 2 எதிர்மறையாய் வந்த விமர்சனம்.. முதல் பாகம் vs இரண்டாம் பாகம் தூக்கி சுமந்த விஜய் சேதுபதி

விடுதலை இரண்டாம் பாகம் நேற்று ரிலீசாகி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது ஆனால் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் குறைவில்லாமல் வந்து கொண்டுதான் இருக்கிறது . முதல் பாகம் போல் இல்லாமல் இரண்டாம் பாகத்தில் கோட்டை விட்ட சில விஷயங்களை ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

விடுதலை 2 முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாகத்தில் முதல் அரை மணி நேரமே இருக்கிறது. அதன் பிறகு போராளி, கே கே ஐயாவாக வரும் கிஷோர் குமார் கதாபாத்திரம் தான் விஜய் சேதுபதியின் அடுத்த கட்ட நகர்வுக்கு உதவுகிறது.

சின்ன சின்ன போராட்டங்கள் செய்து, லெனின் கொள்கையை பரப்பி போராளியாக வாத்தியார் கருப்பன் என்ற பெருமாள் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி. விடுதலை 2 முதல் அரை மணி நேரம் படம் ஆடியன்ஸை சீட் நுனியில் அமர வைக்கிறது.

அதன்பின் வழக்கமாக போராட்ட கதைக்களம் தான் மேலோங்கி இருக்கிறது. கிஷோர் குமார் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தங்களது கருத்துக்களை முன்மொழிந்து போராட்டம் செய்வது சற்று மெதுவாக சென்றாலும், கிஷோர் குமார் இறப்புக்கு பின் கதை சூடு பிடிக்கிறது.

வாத்தியார் ஐயாவாக முழு படத்தையும் தோளில் தூக்கி சுமந்து இருக்கிறார் விஜய் சேதுபதி. மறுபுறம் சேத்தன், இளவரசன் என அனைவரும் ஸ்கோர் பண்ணி உள்ளனர். சூரி இந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டுமே அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மற்றபடி படத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டால் முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் சுவாரஸ்யம் கம்மிதான்

Trending News