Bigg Boss 8 Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, 75 நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிய போகிறது. அதனால் மீதம் இருக்கும் வாரங்களில் எப்படியாவது சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் கொடுத்தால் தான் அடுத்த சீசனை கொண்டுவர முடியும் என்பதால் பிக் பாஸ் அவங்க தரப்பில் இருந்து சில பல வேலைகளை பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஒவ்வொரு சீசன்களிலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பங்களை வீட்டிற்குள் கூட்டிட்டு வந்து குதூகலப்படுத்துவார்கள். அந்த வகையில் சில போட்டியாளர்கள் மக்களின் பேவரைட் ஆக இருக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பங்களை பார்க்க வேண்டும் என்பதில் மக்கள் ரொம்பவே ஆவலாக இருப்பார்கள்.
தற்போது இருக்கும் போட்டியாளர்கள் யார் என்றால் முத்துக்குமரன், ஜாக்லின், சௌந்தர்யா, தீபக், பவித்ரா, அருண், விஷால், ரயான், ராணவ், மஞ்சரி, அன்சிதா, ஜெஃப்ரி மற்றும் ரஞ்சித். ஆனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி போவது ரஞ்சித் தான். ஆனால் இவர் போவதற்கு மக்கள் ஓட்டு ஒரு வகையாக இருந்தாலும் பிக் பாஸ் எடுத்த முடிவின் காரணமாகவே இந்த வாரம் ரஞ்சித் வெளியேறப் போகிறார்.
அதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்னவென்றால் கடந்த வாரம் கேப்டன் டாஸ்க் நடந்த பொழுது ஈசியாக ரஞ்சித் வெற்றி பெற்றார். அத்துடன் அவர் தலைமை பொறுப்பை ஏற்று நாமினேஷனிற்கு வராமல் தப்பித்து விட்டார். இதனை தொடர்ந்து இன்னும் அடுத்த வாரமும் ரஞ்சித்தை காப்பாற்றலாம் என பிக் பாஸ் ஒரு முடிவு பண்ணி வைத்திருந்தது.
அதுக்கு என்ன காரணம் என்றால் போட்டியார்களின் குடும்பம் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் பொழுது ரஞ்சித் குடும்பமும் உள்ளே வர வைக்க வேண்டும். அந்த வகையில் பிரியாராமன் உடன் சேர்ந்து ரஞ்சித் மகனை உள்ளே கூட்டிட்டு வந்துவிட்டால் அதன் மூலம் செண்டிமெண்டாக மக்கள் அதிகமாக பார்த்து வரவேற்பு கொடுப்பார்கள். ஏனென்றால் ரஞ்சித் மகனுக்கு உடல் அளவில் சில குறைபாடுகள் இருப்பதால் டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் ரஞ்சித்திடம் பிக் பாஸ் தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கிறார்.
அதாவது குடும்பங்கள் வரும் வாரங்களில் உங்கள் மகனையும் கூட்டிட்டு வரலாமா என்று பெர்மிஷன் கேட்டிருக்கிறார். அதற்கு ரஞ்சித் வேண்டாம் என்று சொல்லிய நிலையில் பிக் பாஸ் அவருடைய தரப்பில் இருந்து சில விஷயங்களை எடுத்து வைத்திருக்கிறார். ஆனாலும் ரஞ்சித் வேண்டவே வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
உடனே இனியும் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் ஓட்டு படி இந்த வாரமே அவரே வெளியே அனுப்பலாம் என்று அதிரடியாக பிக் பாஸ் முடிவு எடுத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கடந்த சில வாரங்களாக ரஞ்சித்தின் உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் இருந்ததால் தொடர்ந்து அவரால் முழுமையான பங்களிப்பை கொடுக்கவும் முடியாது. குடும்பத்தில் இருப்பவர்களையும் வேண்டாம் என்று சொல்லிய நிலையில் பிக் பாஸ் விஜய்சேதுபதியிடம் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.