திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆக்ரோஷமாக கொந்தளிக்கும் முத்து, ஜீவா சொல்லப்போகும் உண்மை.. ரோகினி மேல் பழி போட போகும் மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பொய்யும் பித்தலாட்டமும் செய்தால் போதும் வாழ்க்கையை ஈசியாக கொண்டு போகலாம் என்று தவறாக புரிந்து கொண்ட ரோகிணிக்கு இந்த வாரம் மிகப்பெரிய சவுகடியாக இருக்கப் போகிறது. அதாவது ரோகிணி பொறுத்த வரை, தான் வாழ வேண்டும் என்றால் மற்றவர்களின் சந்தோசத்தை பற்றி கூட யோசிக்காமல் அவர்களை கஷ்டப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பர்.

அதே மாதிரி ரோகிணியை கல்யாணம் பண்ணிய மனோஜும் தன்னுடைய சந்தோஷத்திற்காக சுயநலமாக யோசிக்க கூடியவர் தான். அப்படிப்பட்ட இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நிலையில் கிடைக்கிற கேப்பில் எல்லாம் பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றி அதில் சொகுசு வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டார்கள். இதில் ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்லை என்பதற்கு ஏற்ப மனோஜ் ரோகிணி நிறைய பித்தலாட்டங்களை பண்ணி தில்லுமுல்லான விஷயங்களை செய்திருக்கிறார்கள்.

ஆனால் இதற்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக முத்து அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க போகிறார். அதாவது மனோஜை ஏமாற்றி பணத்தை திருடிட்டு போனது ஜீவா தான் என்ற உண்மை முத்துக்கு தெரிந்து விடுகிறது. உடனே முத்து, ஜீவா இருக்கும் வீட்டிற்கு சென்று உனக்கு மனோஜ் ஞாபகம் இருக்கிறதா அவர் தான் என்னுடைய அண்ணன். ஒழுங்கு மரியாதையா அவனிடம் இருந்து எடுத்துட்டு போன 27 லட்ச ரூபாய் பணத்தை எனக்கு இப்பொழுதே கொடுக்கணும் என்று கேட்கிறார்.

அதற்கு ஜீவா, அதை கடைசி முறை வந்திருக்கும் பொழுது ரோகிணி மற்றும் மனோஜ் இடம் திருப்பி வாங்கிக் கொண்டார்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு நம்பாத முத்து, அப்படி என்றால் நீயே அந்த உண்மை அனைத்தையும் வந்து எங்கள் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லு என்று ஜீவாவை முத்து கூப்பிடுகிறார். உடனே ஜீவாவும் அவர்கள் இரண்டு பேருக்கும் நானும் வட்டி முதலுமா கொடுக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அதனால் உங்களுடன் வருகிறேன் என்று உண்மையை சொல்வதற்கு கிளம்பி விட்டார்.

அந்த வகையில் வீட்டில் அனைவரும் இருக்கும் பொழுது ஜீவாவை முத்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுவார். அத்துடன் ஜீவாவை காட்டி இவள் தான் மனோஜிடமிருந்து பணத்தை திருடிட்டு போயிருக்காங்க என்று சொல்லப் போகிறார். இதை கேட்டதும் குடும்பத்தில் இருப்பவர்கள் கோபப்பட்டு திட்ட போகிறார்கள். அப்பொழுது முத்து எல்லா உண்மையையும் சொல்லும் விதமாக அந்த பணத்தை ரோகிணி மற்றும் மனோஜ் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப் போகிறார்.

இதை கேட்டது அதிர்ச்சியான குடும்பம் ரோகிணி மற்றும் மனோஜிடம் கேட்கப் போகிறார்கள். உடனே திருட்டு முழி முழித்துக் கொண்டிருக்கும் இவர்கள் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் உண்மையை ஒத்துக் கொள்ள போகிறார்கள். கடைசியில் முத்து அதட்டி உருட்டி கேட்ட நிலையில், ஆமா நான் ஜீவாவிடம் இருந்து வட்டி முதலுமாக 30 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி விட்டேன். ஆனால் அதை திருப்பி வீட்டில் கொடுத்து விடலாம் என்று சொன்னேன்.

ஆனால் ரோகிணி தான் இப்போதைக்கு வீட்டில் கொடுக்க வேண்டாம். இது வைத்து நீ பிசினஸ் பண்ணலாம் என்று ஐடியா கொடுத்தார். இவ்வளவு பணம் ஏது என்று கேட்டார்கள் என்றால் என்ன சொல்வது என்று நான் ரோகினிடம் கேட்டேன் அப்பொழுது என்னுடைய அப்பா கொடுத்ததாக சொல்லி அனைவரையும் ஏமாற்றிவிடலாம் என்று எனக்கு ஐடியா கொடுத்ததை ரோகிணி தான் என்று மனோஜ் மொத்த பலியையும் ரோகினி மீது தூக்கிப் போடப் போகிறார். எது எப்படியோ ரோகினி மீது ஓவராக நம்பிக்கை வைத்த விஜயாவிற்கு மிகப்பெரிய ஆப்பாக இருக்கப் போகிறது.

Trending News