Ethirneechal 2 Serial: எதிர்நீச்சல் பெயரை கேட்டாலே சும்மா அதிருதில்ல என்று சொல்வதற்கு ஏற்ப சீரியல் மூலம் அனைவரது மனதையும் கட்டி போட்டவர் தான் இயக்குனர் திருச்செல்வம் என்கிற ஜீவானந்தம். ஒரு முடிந்து போன சீரியலுக்கு இத்தனை எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அது வெறும் நாடகம் அல்ல அதில் இருக்கும் உயிரோட்டம் தான். அந்த அளவிற்கு கதையும் சரி அதில் நடித்த கதாபாத்திரங்களும் இயல்பாக நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்கள்.
700 எபிசோடு தாண்டிய நிலையில் அவசரமாக முடிந்திருந்தாலும் தற்போது அனைவரது வேண்டுகோளுக்கு இணங்க மறுபடியும் எதிர்நீச்சல் 2 நாளை முதல் வாரத்தில் ஏழு நாட்கள் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது. அந்த வகையில் இன்று ஜீவானந்தம் சொன்ன கதையின் சுருக்கம் என்னவென்றால் மக்கள் எதிர்பார்த்தபடி அவர்களுடைய ஆதங்கத்தை பூர்த்தி பண்ணும் விதமாக எதிர்நீச்சல் 2 சீரியலின் கதை நிச்சயம் திருப்திப்படுத்தும்.
அந்த வகையில் வெவ்வேறு குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள் ஒரு வீட்டுக்கு மருமகளாக வந்த பிறகு அவர்களுடைய கனவுகள் அனைத்தும் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் தன்னுடைய கனவுகளை யாருக்காகவும் எதற்காகவும் கைவிடக்கூடாது என்று தைரியத்தை சொல்லி ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் கனவை நிறைவேற்ற பாடுபடும் விதமாக ஜனனி கேரக்டர் அமைகிறது.
அதன்படி ஈஸ்வரி அவருக்குத் தெரிந்த அனுபவங்களை புகட்டும் விதமாக அவருடைய கேரக்டர் இருக்கப் போகிறது. அத்துடன் இனி ஈஸ்வரி எப்போதும் சோகமாக மட்டும் இருக்கப் போறது இல்லை. சந்தோஷத்தை எப்படி கொண்டாடலாம் என்று ஒரு துணிச்சலான பெண்ணாகவும் இருக்கப் போகிறார் என்று கூறியிருக்கிறார். அத்துடன் தனக்கு தெரிந்த சமையல் விஷயத்தை வைத்து படிப்படியாக முன்னேறி காட்டப் போகும் நந்தினியின் வெற்றியும் நிகழப் போகிறது.
இவர்களைத் தொடர்ந்து ரேணுகா தன்னால் சாதிக்க முடியாமல் போயிருந்தாலும் பரதத்தின் மூலம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு நான் நிச்சயம் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று ரேணுகா நடத்தும் பரதநாட்டியம் பள்ளிக்கூடம் மூலம் அவருடைய கனவை நிறைவேற்றப் போகிறார். இப்படி இவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படி கற்களிலும் வித்தியாசமான குணசேகரனை சந்திக்கப் போகிறார்கள்.
வீட்டில் மட்டுமில்லாமல் வெளியிலும் அந்த குணசேகரன் எப்படி ஓவர் டேக் பண்ணி சாதனை புரிகிறார்கள் என்பதை தான் இந்த நாடகத்தின் கதையாக இருக்கும். அத்துடன் ஜனனி கதாபாத்திரம் என்னவென்றால் படித்துவிட்டு சுயமாக சம்பாதிக்க முடியாமல் அவஸ்தைப்படும் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஜனனி ஒரு ஸ்டாராக இருக்கப் போகிறார் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அதே நேரத்தில் நக்கல் நையாண்டி காமெடி கலகலப்பு என அனைத்தும் வைக்கப்பட்டு முழுக்க முழுக்க நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களை எதிர்நீச்சல் 2 கதையுடன் சந்திக்கிறேன் என்று ஜீவானந்தம் அவருடைய சுருக்கமான கதையை கூறி இருக்கிறார். மேலும் இதில் ஜனனியாக நடிக்கப் போகும் பார்வதியின் நடிப்பு மெருகேற்றும் வகையில் அனைவரையும் கவர்ந்து உடல் அளவிலும் மனதளவிலும் தைரியத்தை கொண்டு வரும் அளவிற்கு உன்னதமாக இருக்கப் போகிறது.