Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியாராகம் சீரியலில், ரகுராமை எப்படியாவது அவமானப்படுத்தி குடும்பத்தில் பல சிக்கல்களை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து புவனேஸ்வரி முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் பார்வதி மூலம் ரகுராம் வீட்டில் இருக்கும் கோவில் நகையை திருட சொல்கிறார். பார்வதியும் சாருவின் அப்பா சொன்னதை கேட்டு ரகுராம் வீட்டில் இருக்கும் கோவில் நகையை எடுத்து கொடுத்து விடுகிறார்.
உடனே சாரு அப்பா, அந்த நகை அனைத்தையும் புவனேஸ்வரி வீட்டில் கொடுத்து விடுகிறார். இது எதுவும் தெரியாத ரகுராம் கோவிலில் போலி நகையை கொண்டு போய் கொடுத்து சிக்கலில் மாட்டியதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார். உடனே பத்மா இதற்கெல்லாம் காரணம் மாயா தான் என்று மாயா மீது பழி போட்டு பேச ஆரம்பித்து விட்டார்.
இதைப் பார்த்த ஜானகி, யார் நகை திருடினார் என்ற உண்மையை நான் இப்பொழுது கண்டுபிடித்து விடுகிறேன் என்று பார்வதியை தனியாக கூட்டிட்டு போய் கன்னத்தில் பளார் என்று ஒரு அறையை அறைந்து உண்மையை கேட்கிறார். பார்வதி பயத்தில் எல்லா உண்மையும் சொல்லிய நிலையில் மாயாவிற்கு கோவில் நகையை அனைத்தும் புவனேஸ்வரி வீட்டில் தான் இருக்கிறது என்று தெரிந்து விட்டது.
உடனே எப்படியாவது நகையை எடுத்துட்டு பெரியப்பாவை காப்பாற்ற வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். அதன்படி கார்த்திக்கு தேவி பேசுவது போல் மாயா போன் பண்ணி பேசி சும்மா ஒரு டிராமாவே போடுகிறார். மாய போட்ட டிராமாவை நம்பி கார்த்திக், புவனேஸ்வரி வீட்டில் வைத்திருந்த கோவில் நகையை எடுத்துட்டு போய் கொடுக்கிறார்.
அந்த நகையை போலீஸ் ஸ்டேஷனிடம் ஒப்படைத்து ரகுராமை மாயா காப்பாற்றி விடுகிறார். இது எதுவும் தெரியாத புவனேஸ்வரி கார்த்திக் செய்த விஷயத்தால் மாட்டிக் கொள்ளப் போகிறார். அடுத்ததாக பார்வதி செய்த திருட்டு வேலை சிவராமுக்கு தெரிந்தால் பார்வதி அந்த வீட்டில் தங்க முடியுமா?
தன்னை காப்பாற்றியது மாயா தான் என்ற உண்மை ரகுராம் புரிந்து கொள்வாரா? புவனேஸ்வரி ஆடும் ஆட்டத்திற்கு ஜானகி என்ன முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார் என்ற பல விஷயங்கள் சுவாரசியமாக போய்க் கொண்டிருக்கிறது.