கன்னட சினிமாவை இந்தியா முழுக்க Famous ஆக்கிய படம் என்றால் அது kGF படம் தான். அந்த படத்தின் மூலம் பான் இந்தியா இயக்குனராக அவதாரம் எடுத்தார் பிரசாந்த் நீல். அதுவரை கன்னட படங்களை மற்ற மாநில மக்கள் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த நிலையை மாற்றி, எல்லவரையும் திரும்பி பார்க்க வைத்து, 1000 கோடி-க்கு மேல் வசூல் கொடுத்த படம் என்றால், அது KGF முதல் மற்றும் இரண்டாம் பாகம் தான்.
இந்த படத்தை தொடர்ந்து, பிரபாஸை வைத்து சளார் படத்தை இயக்கினார் இயக்குனர் பிரசாந்த் நீல். அந்த படம் பிரமாண்ட பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டது. மேலும் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் நடித்திருந்தார். KGF படத்தை இயக்கியவர் என்பதாலையே இந்த படத்துக்கு மக்கள் பெருமளவு எதிர்பார்ப்போடு சென்றனர்.
வெற்றி கொடுத்த அலட்சியம்..
ஆனால் மக்களுக்கு சளார் படம் பெரிதாக Connect ஆகவில்லை. படம் நன்றாக இல்லை என்றே பலர் விமர்சித்தார்கள். இந்த நிலையில், இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகிறேன் என்று பிரசாந்த் நீல் சொன்னபோது, “ஒண்ணே.. நல்லா இல்ல.. இதுல ரெண்டு வேறையா..” என்று பலர் விமர்சித்து வந்தனர்.
அதற்க்கு பதில் தெரிவிக்கும் விதமாகவும், ரசிகர்கள், தன் மீது மீண்டும் நம்பிக்கையை வைப்பதற்காகவும், பிரசாந்த் நீல் ஒன்றை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரசாந்த் நீல் கூறியதாவது, “சளார் படத்தில் நான் கொஞ்சம் அதிக கவனம் கொடுத்திருக்க வேண்டும். KGF 1 மற்றும் 2 கொடுத்த வெற்றியில், நான் அலட்சியம் காட்டிவிட்டேன் என்று நினைக்கிறேன். என் மீது தான் தவறு.. ஆனால் இந்த தவறு நிச்சயம் அடுத்த பாகத்தில் நடக்காது..”
“தற்போது அதிக கவனம் கொடுத்து படத்தை உருவாக்குகிறேன்.. அதனால், உங்கள் சப்போர்ட் எனக்கு நிச்சயம் தேவை..” என்று கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து, தவறை ஒப்புக்கொண்டவரை பாராட்டியும் வருகின்றனர்.