விடுதலை 2 படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் பாகம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் பாகம் தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த இரண்டு பாகத்தை எடுக்க வெற்றிமாறன் மொத்தம் 4 வருட கடின உழைப்பை போட்டிருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனை பொறுத்த வரையில், அவரது கேரியரில் கம்மியான படங்களை கொடுத்திருந்தாலும், அனைத்துமே தரமான படங்களாக தான் உள்ளது.
அப்படி பாகம் ஒன்றை சூரியை ஹீரோவாக வைத்து எடுத்த வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக்கி விட்டார். இந்த நிலையில், 3-ஆம் பாகம் வருவதற்கு வாய்ப்பு கம்மி என்று தான் கூறப்படுகிறது.
விடுதலை 2 படம், நல்ல கதை, திரைக்கதை இருந்தாலும், சில வசனங்கள் திணிப்பது போலவும், பாடம் கற்பிப்பது போலவும் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படத்தில் வன்முறை காட்சிகள், அதிகம் இருப்பதால், படத்துக்கு A சான்றிதழ் கொடுத்திருந்தது CBFC. ஆனால் A சான்றிதழ் கொடுத்தான் மதிதியில் ஆளும் அரசாங்கத்துக்கு எதிராக சில கருத்துக்கள் இருந்ததால், அதையெல்லாம் நீக்க சொல்லி குடைச்சல் கொடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
விடுதலை 2 படத்தை விட கேவலமான அரசியல்
பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த களங்களில் இருந்து உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்ற வசனத்தை, CBFC மாற்றியமைத்து, “அந்த ஆயுதம் வோட்டாக கூட இருக்கலாம்..” என்று சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் தேசிய இன விடுதலை என்ற கட்சி பெயரை நீக்க சொல்லி இருக்கிறார்கள். மொத்தத்தில், உண்மையாக இருக்கும் எந்த கட்சியையும் அடையாளப்படுத்த வேண்டாம் என்று CBFC கூறியுள்ளது.
இந்த நிலையில், சில படங்களில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் இருக்கும் வசனங்களை நீக்காமல், அப்படியே படத்தை கட்சிக்கு அனுமதிக்கும் CBFC, ஏன் இந்த படத்துக்கு ‘A’ சான்றிதழ் கொடுத்தபின்னும் இத்தனை விஷயங்களை நீக்க சொல்லியும் Mute பண்ண சொல்லியும் அராஜகம் செய்கிறது என்று தற்போது சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் “எங்கு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வந்துவிடுமோ” என்ற உள்பயத்தில் தான் இப்படி செயல்படுகின்றனர்.. “இதெல்லாம் விடுதலை 2 படத்தில் காட்டி இருக்கும், பதவியில் உள்ளவர்கள் செய்யும் அரசியல் அராஜகத்தை விட கேவலமாக உள்ளது” என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.