Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் மற்றும் ரோகினி ஆடிய ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாங்க நினைத்த வீட்டுக்கு 30 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்து போய்விட்டார்கள். இது தெரியாமல் அந்த வீட்டிற்கு ரோமையா என்ற பெயர் போர்டு வைக்க வேண்டும் என்று அதையும் புதுசாக ஆர்டர் கொடுத்து விட்டார்.
அது மட்டுமா ஏமாந்த வீட்டுக்கு பேய் இருக்கிறதா பிசாசு இருக்கிறதா? என்று பல அலப்பறைகளை பண்ணி முத்துவையும் மீனாவையும் அவமானப்படுத்தும் விதமாக மட்டம் தட்டியும் பேசினார்கள். மொத்தமாக வைத்த ஆப்பு போல மனோஜ் ஏமாந்த அந்த வீட்டின் உண்மையான ஓனர் வந்து இது என்னுடைய வீடு, யாரை கேட்டு இங்கே கும்பலாக தங்கி இருக்கிறீர்கள்.
வீட்டை விட்டு வெளியே போங்க என்று போலீசை கூட்டி வந்து மொத்த குடும்பத்தையும் வெளியே அனுப்பி விட்டார்கள். அப்படி என்றால் நாம் ஏமாந்துட்டோமா மனோஜ் என்று ரோகிணி மயக்கம் போட்டு விழுந்து அங்க ஒரு ஆர்ப்பாட்டத்தை பண்ணி வீட்டிற்கு போய்விட்டார்கள்.
இதை பார்த்து நம்ம முத்து சும்மா இருப்பாரா? கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் மனோஜ் மற்றும் ரோகினிக்கு சரியான சவுக்கடியாக மாறிவிட்டது. அதாவது அந்த வீட்டிற்கு நான் வரும்பொழுது நீ 30 லட்சம் ரூபாய் கொடுத்த பணத்தை ஏமாற்றி விட்டுப் போன அவர் வாடகை காரில் போகிறார், இதில் ஏதோ ஒரு சந்தேகம் இருக்கிறது என்று அப்பவே நான் சொன்னேன்.
ஆனால் அதற்கு நீ ஏதோ ஒரு காரணத்தை சொல்லி என்னை தடுத்து விட்டாய். நீ மட்டும் என்னை தடுக்காமல் இருந்தால் அவர் பின்னாடியே பாலோ பண்ணி போயி அவரைப் பற்றி விஷயங்களை நான் தெரிந்து வைத்திருப்பேன். ஆனால் அதற்கும் முன் நீ கோவிலில் வைத்து அட்வான்ஸ் பணத்தை கொடுக்கும் பொழுது சகுனம் சரியில்லை வேண்டாம் என்று மீனா எவ்வளவோ சொல்லி தடுத்து பார்த்திருக்கிறார்.
அதையும் நீயும் உன் பொண்டாட்டியும் கேட்காமல் பணத்தை கொடுத்து தற்போது மொத்தமாக ஏமாந்து விட்டீர்கள். இப்படி 30 லட்ச ரூபாய் பணத்தை ஏமாந்து நின்ற நிலையில் அப்பாவின் பணத்தை எப்பொழுது திருப்பிக் கொடுப்பாய் என்று நாலு கேள்வி மனோஜை பார்த்து முத்து கேட்டு விட்டார்.
உடனே ரோகினி உங்க பேச்சைக் கேட்காமல் வாங்க போனதால் நாங்கள் ஏமாந்து போய்விட்டோம் என்று சொல்லவரீங்களா என கேட்கிறார். ஆமாம் அதுதான் உண்மை என்று முத்து சொல்லிய நிலையில், இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு நீங்க உங்க அப்பாவுக்கு போன் பண்ணி பணத்தை கேட்பதுதான் என்று ரோகிணி தலையில் பெரிய பாறாங்கலையே போடும் அளவிற்கு முத்து ஒரு செக் வைத்து விட்டார்.
வழக்கம்போல் இதை கேட்டதும் விஜயா மற்றும் மனோஜ், ரோகிணியே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ரோகிணி எங்க அப்பா தற்போது ஜெயிலில் இருப்பதால் என்னால் எதுவும் பண்ண முடியாது. எங்க அப்பாவும் உதவி பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார். ஆக மொத்தத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி இதோட காலி என்று சொல்வதற்கு ஏற்ப மொத்தமாக ஏமாந்து விட்டார்கள்.
இதோடு மட்டும் இல்ல இனிமேல் தான் இருக்கிறது என்பதற்கு ஏற்ப மனோஜை ஏமாத்திட்டு பணத்தை எடுத்துட்டு போனது ஜீவா தான் என்ற உண்மை முத்துக்கு தெரிய வந்துவிட்டது. உடனே முத்து, ஜீவா இருக்கும் வீட்டிற்கு போய் நீதான் என் அண்ணனிடம் பணத்தை திருடிட்டு போனியா என்று சொல்லி சண்டை போடுகிறார்.
அதற்கு ஜீவா, ஆமாம் ஆனால் அந்தப் பணத்திற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து உங்க அண்ணனிடம் கொடுத்து விட்டேன் என்று சொல்லி விடுகிறார். உடனே முத்து அப்படி என்றால் நீயே எங்க வீட்டுக்கு வந்து எல்லாம் உண்மையும் சொல்லு, அப்பொழுதுதான் அவர்கள் அனைவரும் நம்புவார்கள் என்று ஜீவாவை முத்து வீட்டிற்கு கூப்பிடுகிறார்.
உடனே ஜீவாவும், எனக்கும் அவர்களிடம் தீர்க்க வேண்டிய ஒரு கணக்கு இருக்கிறது என்று சொல்லி முத்து கூட வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் முத்துவிடமும் குடும்பத்திடமும் கையும் களவுமாக மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் சேர்ந்து மாட்டிக்கொள்ளப் போகிறார்கள்.