விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இப்பொழுது பார்ட் டைம்மாகத்தான் படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 படத்தோடு விஜய்யின் சினிமா கேரியர் க்ளோஸ் ஆகிறது. இன்று உச்ச நடிகராக இருக்கும் விஜய் ஆரம்பத்தில் பல தடைகளை தாண்டி ஜெயித்தவர்.
சினிமாவில் அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பலபேர். அவர்களை எல்லாம் கௌரவப்படுத்த விஜய் திட்டமிட்டு வருகிறார். சினிமாவில் இருந்து விலகும் விஜய்க்கு தளபதி 69 படம் முடிந்தவுடன் விழா எடுக்க இருக்கிறார்கள்.
விஜய்யும் சினிமாவில் தன்னை நிலை நிறுத்தி ஜெயிக்க வைத்தவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு உயர்ந்த பரிசு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார். அவர்களுக்காக தங்கத்தில் ஆபரணங்கள், தங்க சிலைகள், உயர்ந்த பரிசு பொருள்கள் போன்றவற்றை தேடி வருகிறார்.
விஜய் தன்னுடைய வேலை ஆட்களை பெரிய தங்க நகை கடைகளை பார்வையிட சொல்லி இருக்கிறார். லிஸ்டில் இருக்கும் பரிசு பொருட்களை வாங்க முயற்சித்து வருகிறார். நான் சினிமாவில் வளர உறுதுணையாக இருந்தவர்களுக்கு இந்த உயர்ந்த பரிசுகளை கொடுக்கப் போகிறார்.
விஜய்க்கு ஆஸ்தான நண்பர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இதில் வருகிறார்கள். 1984இல் இருந்து 2024 வரை சினிமாவில் 40 வருட காலம் பயணித்துள்ளார் விஜய். இதில் சூப்பர் குட் பிலிம்ஸ் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது. அவர்கள் விஜய்யின் லிஸ்டில் முதலாவதாக இருக்கிறார்கள் அவர்களைத் தவிர விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரும் இதில் பெரும் பங்கு வகிக்கிறார்