விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு வருடத்திற்கு 6 முதல் 7படங்கள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. எந்த தியேட்டர் போனாலும் இவரது முகம் தான். இதனை புரிந்து கொண்ட அவர் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டார். வருடத்திற்கு மூன்று நான்கு படங்கள் மட்டுமே கமிட் செய்தார்.
கேமியோ ரோல், வில்லன் போன்ற கதாபாத்திரங்கள் இனிமேல் பண்ணப்போவதில்லை என அறிக்கை வெளியிட்டு இருந்தார். அப்படி ஒரு எண்ணத்தில் இருந்தவர் இப்பொழுது மீண்டும் டசன் கணக்கில் படங்களை குவித்து வருகிறார். ஏன் இந்த மாற்றம் என்று தெரியவில்லை.
பழக்கவழக்கத்திற்காக இனிமேல் படம் பண்ணப் போவதில்லை எனவும் கூறி வந்தார். தற்சமயம் டிரெயின், காந்தி டாக்கீஸ், ஏஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். டி எஸ் பி, மேரி கிறிஸ்மஸ், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் அடுத்தடுத்து இவருக்கு அடி வாங்கியது.
விடுதலை, மகாராஜா, விடுதலை 2 போன்ற கதை அம்சம் கொண்ட படங்களை மட்டும் தான் இனிமேல் தேர்வு செய்து நடிப்பேன் என வைராக்கியத்துடன் இருந்த அவர் இப்பொழுது சகட்டுமேனிக்கு படங்களை கமிட் செய்து வருகிறார். இவர் நடித்த விடுதலை மற்றும் மகாராஜா இவரை வேறு லெவலில் கொண்டு போனது.
இதே போல் கதை அம்சம் கொண்ட படங்களில் மட்டும் தான் நடிப்பேன் எனக் கூறி வந்த இவர் தற்போது ஹரியுடன் ஒரு படம் கமிட்டாகி இருக்கிறார். இதனால் பழையபடி கமர்சியல் பக்கம் திரும்பி விட்டார் என அவரது ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். இந்த படத்தை நயன்தாரா தயாரிக்க இருக்கிறார்.