Veera Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், கிராமத்துக்கு கோவில் திருவிழாவிற்காக போன ராமச்சந்திரன் குடும்பம் ஒரு சின்ன சிக்கலில் மாட்டிக்கொண்டது. இதில் மாறன் உயிர்க்கு ஆபத்து என்ற நிலையில் வீராவின் அண்ணனாக மாறனின் நண்பராக வந்து சரவண வேலுவாக மாறனின் உயிரை காப்பாற்றி விட்டார். அத்துடன் மறுபடியும் அனைவரும் ஊருக்கு திரும்பிய நிலையில் ஜவுளி கடைக்கு கண்மணி வந்து விட்டார்.
ஆனால் கார்த்திக் வந்த நிலையில் இனி கார்த்திக் ஜவுளி கடை பக்கமே வரவிடாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக பிளான் பண்ணினார். அதன்படி ராமச்சந்திரனிடம் வழக்கமாக ஸ்கூல் யூனிபார்ம் வாங்கிட்டு வரும் நபர் மொத்த ஆர்டரை கொடுத்திருந்தார். இந்த பொறுப்பை ராமச்சந்திரன், கார்த்திக் இடம் கொடுத்து விட்டார்.
இதில் எப்படியாவது சதி செய்து கார்த்திகை அவமானப்படுத்த வேண்டும் என்று கார்த்திக் டிரைவராக கூட்டிட்டு போனவர் கண்மணி வச்ச ஆளு என்பதால் நல்ல தரமான ஆடைகளை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக லோக்கலாக இருக்கும் யூனிஃபார்மை கொடுத்துவிட்டார்.
இதனால் கோபப்பட்ட அந்த நபர் நேரடியாக ராமச்சந்திரன் கடைக்கு வந்து அந்த யூனிஃபார்ம்களை தூக்கி எறிந்து ராமச்சந்திரனிடம் கோபமாக பேசி திட்டி விட்டார். இதற்கெல்லாம் காரணம் கார்த்திக் தான் என்று அனைவரும் முன்னாடியும் கண்மணி ராமச்சந்திரன் இடம் போட்டு கொடுக்கிறார்.
கண்மணி சொல்வது தான் சரி என்று ராகவனும் தலையாட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு கார்த்திக் வந்ததும் கண்மணி ஏன் கார்த்திக் இப்படி பண்ணுனீங்க. தரமான யூனிபார்மை கொடுக்காமல் லோக்கல் யூனிபார்மை கொடுத்ததால் அவங்க வந்து மாமாவிடம் சண்டை போட்டு பெரிய பிரச்சினை பண்ணி விட்டாங்க.
இதுல கூட கவனமாக இருக்க மாட்டீங்களா என அனைவரும் முன்னாடியும் கார்த்திகை திட்ட ஆரம்பித்து விட்டார். இதனால் கோபப்பட்ட கார்த்திக் சண்டை போடும் அளவிற்கு ஒரு பஞ்சாயத்து ஏற்பட்டுவிட்டது. ஆனால் இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது கண்மணி தான் என்று வீராவுக்கு சந்தேகம் வந்தும் அக்காவின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்பதற்காக பொறுமையாக இருக்கிறார்.
அதே நேரத்தில் கண்மணி மீதுதான் தவறு இருக்கும் என்று தெரிந்தும் மாறன், வீராவுக்காக எந்த உண்மையையும் கண்டுபிடிக்காமல் அமைதியாக இருப்பது கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு விஷயத்திலும் கண்மணி ஜெயித்துக் கொண்டே வருகிறார். கண்மணி ஆட்டத்தை அடக்க வேண்டும் என்றால் வீரா, மாறனிடம் எல்லா உண்மையும் சொல்லி இரண்டு பேரும் சேர்ந்து கண்மணிக்கு ஒரு பதிலடி கொடுத்தால் மட்டும்தான் தீர்வாக இருக்கும்.