Arulnithi: சில ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் ஆகோ ஓஹோ என்று கொண்டாடும் படி இல்லையென்றாலும் அந்தப் படங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படி நல்ல வரவேற்பை பெற்று விடும். இந்த லிஸ்டில் நடிகர் அருள்நிதியும் ஒருவர்.
ஏனென்றால் இவர் நடித்த படங்கள் அனைத்துமே கதைகளும் நடிப்பும் குறையை சொல்ல முடியாத அளவிற்கு மக்களிடம் நிறைய கைதட்டல்களை பெற்றிருக்கிறது.
முதல் படம் வம்சம் என்ற படமாக இருந்தாலும் அந்தப் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இதனை தொடர்ந்து மௌனகுரு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், டிமான்டி காலனி போன்ற பல படங்களை கொடுத்து இந்த ஆண்டு டிமான்டி காலனி 2 படத்தையும் வெற்றிகரமாக கொடுத்திருக்கிறார்.
இந்த படத்திற்கு பிறகு அடுத்து புதிதாக அருள்நிதி ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார். ஆனால் இன்னும் இப்படத்திற்கு பெயரிடத நிலையில், இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முடிந்த பிறகு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.
ஆனால் கலாநிதி தற்போது இப்படத்தை எடுத்தது போதும் என்று பாதிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார். அதற்கு காரணம் இயக்குனர் முத்தையா மீது நம்பிக்கை இல்லாததால் இதுவரை எடுத்த படத்தை பார்த்த பின்பு அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்தலாம் என்று கலாநிதி மாறன் இயக்குனருக்கு ஒரு செக் வைத்திருக்கிறார்.
ஏனென்றால் இயக்குனர் முத்தையா இதற்கு முன்னதாக எடுத்த கொடிவீரன், தேவராட்டம், புலிகுத்தி பாண்டி, விருமன் மற்றும் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் முத்தையா எடுக்கும் படத்தின் மீது கலாநிதி மாறனுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
ஏனென்றால் அந்த அளவிற்கு அருள்நிதி நடிக்கும் படத்திற்கு பணத்தை வாரி இறைக்கிறார். போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்பதால் இதுவரை முத்தையா எடுத்த காட்சிகள் அனைத்தையும் போட்டு பார்த்த பின்பு மேற்கொண்டு பேசிக் கொள்ளலாம் என்று கலாநிதி அந்த படத்தை பாதிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார். ஆனால் அருள்நிதி கமிட் ஆகிறார் என்றால் அந்த படத்தின் காட்சிகளும் வசனங்களும் நிச்சயம் நன்றாகத் தான் இருக்கும்.
அந்த வகையில் எப்படியும் இப்படம் கலாநிதி மாறனுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கூடிய சீக்கிரத்தில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.