வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நயன்தாரா பாணியில் இறங்கிய கீர்த்தி சுரேஷ்.. அப்படியே ஏழரையையும் சேர்த்து இறக்கிக்கங்க

நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு சமீபத்தில், அவர் பல நாள் காதலனான அன்டனி தட்டிலுடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு நட்சத்திர பட்டாளங்கள் வந்திருந்தது. அப்படி இருவர் முறை படையும் கோலாகலமாக திருமணத்தை நடத்தி முடித்த பின்னர், ஹனிமூன்-க்கு செல்வார் என்று பார்த்தால், வேலை மீது கொண்ட தீரா காதல் காரணமாக வருண் தவானுடம் இணைந்து போட்டோஷூட் நடத்த ஆரம்பித்துவிட்டார்.

இந்த Photoshoot இவர்களின் புதிய படமான பேபி ஜான் படத்துக்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் ஆக உள்ளது. கழுத்தில் மஞ்சள் தாலியுடன் கீர்த்தி சுரேஷ் வளம் வருகிறார். அதை பல ரசிகர்கள் பாராட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி ஒரு சில ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்பை போல இப்போது இல்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்..

இருப்பினும் கீர்த்தி சுரேஷும் அதே போல நடிப்பாரா என்று கேட்டால், நிச்சயம் அவர் தொடர்ந்து நடிக்கும் Plan-ல் தான் உள்ளார். அதுமட்டுமின்றி, நயந்தாராவை போல ஒரு சில முக்கிய முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறார். தற்போது பாலிவுட்-டில் என்ட்ரி கொடுத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், அங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து நடிப்பார்.

அதுமட்டுமின்றி, தனக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்து, தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளார். அந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து, அது மூலமாக கல்லா கட்ட பிளான் செய்துவிட்டார்.

மேலும், அவரை வைத்து Women Centric படங்களையும் எடுக்க உள்ளார். இது தவிர பல பிசினெஸ்-களை ஆரம்பிக்கும் முயற்சியிலும் இறங்கிவிட்டார். குட்டி நயன்தாரா என்பதை நிரூபித்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.

Trending News