Memes: இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரவில் இருந்தே சர்ச்சில் பிரேயர், வாழ்த்து சொல்லுவது என இன்றைய நாள் கலை கட்டி வருகிறது.
அதேபோல் அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்களுக்கும் இனிப்புகளை கொடுத்து மகிழ்கின்றனர். நண்பர்கள் வீட்டிற்கு வருவது, பிரியாணி சாப்பாடு என இன்றைய கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது.
அதேபோல் இந்து முஸ்லிம் நண்பர்கள் எப்போது நண்பன் கேக் கொண்டு வந்து தருவான் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இன்னும் சிலர் தீபாவளிக்கு பலகாரம் தரலையே இன்னைக்கு கேக் வருமா என்ற யோசனையிலும் இருப்பார்கள். இதை குசும்புக்கார நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர்.
ரம்ஜானுக்கு பாட்ஷா ஃபோனை தான் எடுக்கல ஆனா கிறிஸ்மஸ்க்கு ஆன்டனி ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டான். இன்னைக்கு கேக் தரவங்களுக்கு 20 நாளில் பொங்கல் தரப்படும்.
வாக்கு மாற மாட்டோம் கேக் கொடுங்கள் என அலப்பறை செய்து வருகின்றனர். அதேபோல் மதம் என பிரிந்தது போதும் என பக்கத்து வீட்டு ஆண்ட்டியிடம் ஜாலியாக கேக் கேட்கும் நண்பர்களும் உண்டு.
இப்படியாக சர்ச்சுக்கு சாமி கும்பிடுவது போல் கேக் வாங்கி சாப்பிட்டு கிறிஸ்மஸை எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். அது பற்றிய சில ஜாலி மீம்ஸ் இதோ.