இன்றைய இந்தியாவில் மிக முக்கியமான செய்தி அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இரண்டு பேர் உயிர் பறிபோனதுதான். ஒரு குடும்பத்தோட உயிர் 1500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
பலரும் இந்த செய்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள் எந்த டிவி சேனல்கள் எந்த youtube ஓபன் செய்தால் போதும் அதில் வரும் செய்தி ஒரு திரைப்படத்தை பார்க்க வந்த ஒரு குடும்பம் இன்று சிதைந்து விட்டது.
அந்தக் குடும்பம் வாழ்நாளில் மறக்க முடியாத அளவு செய்துவிட்டார் அல்லு அர்ஜுன். ஒரு குடும்பத்தையே அல்லு அர்ஜுன் பணத்திற்காக கொன்றுவிட்டார். அதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை.
தன்னுடைய சுயநலத்திற்காக படம் வசூல் பெற வேண்டும், பணம் குவிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்த ஒரு நாடகம் தான் ‘ரோடு ஷோ’.
ஒரு பிரபலமான நடிகர் ஒரு தியேட்டருக்கு வருகிறார் என்றால் அங்கு எவளோ கூட்டம் கூடும் அதுவும். அதுவும் ஒரு இரவு என்றால் சொல்லவா வேண்டும்.
பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட இத்தகைய நடிகர்களின் படத்தை தமிழ்நாட்டிலும் ஓட வைத்து வெற்றி பெற செய்வது எவ்வளவு பெரிய கேவலமான செயல்.
ஆந்திரா சட்டசபையில் முதலமைச்சர் இதைப்பற்றி பேசியும், நான்தான் ஆந்திரா என்ற திமிரில் அல்லு அர்ஜுன் நடந்து கொண்ட விதம் பெரும் துயரம்.
யாரைக் குறை சொல்ல முடியும்? சினிமா ரசிகர்கள் தான் இதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து தன்னுடைய தலைவனுக்காக படம் பார்ப்பதை விட்டுவிட்டு தன்னுடைய குடும்பத்திற்காக படம் பார்க்க வேண்டும்.