வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கப்பெண்ணில் பக்கா பிளான் போட்டு அன்பு-துளசி நிச்சயம் வரை இழுத்துவிட்ட மகேஷ்.. உண்மை புரியாமல் புலம்பும் ஆனந்தி!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியன் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று தெரிந்த போது மகேஷ் மிருகம் போல் நடந்து கொண்டான்.

அதன் பின்னர் இருவரையும் புரிந்துகொண்டு மீண்டும் பழைய நட்போடு பழகுவது போல் காட்டப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்து வெளியாகும் எபிசோடுகள் மகேஷ் மறைமுகமாக அன்பு மற்றும் ஆனந்தி காதலுக்கு ஆப்பு வைத்திருக்கிறான் என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

நிச்சயம் வரை இழுத்துவிட்ட மகேஷ்

அன்பு துளசியை திருமணம் செய்து கொள்வான் என்று உறுதி கொடுத்து மகேஷ் அன்பை அவன் வீட்டில் கொண்டு போய் விட்டான்.

இதைத் தொடர்ந்து அன்புடன் மாமா மற்றும் அத்தையை வீட்டிற்கு வரவைத்து நிச்சய தாம்பூலம் வரை அவன் அம்மா திட்டம் போட்டு விட்டார்.

இது குறித்து மகேஷிடம் வந்து அன்புவின் அம்மா பேசுகிறார். மகேஷ் அன்புவிடம் நிச்சய தாம்பூலம் தானே நடந்து விட்டுப் போகட்டும் நீ சைலன்டாக இருந்து விடு என்று சொல்கிறான்.

இது முத்துவுக்கு ஒரு வித சந்தேகத்தை எழுப்புகிறது. நீ ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிக்கிறாய் என்று தெரிந்தும் எதற்காக மகேஷ் இப்படி சொல்ல வேண்டும் என்று கேட்கிறான்.

ஆனால் அன்பு மற்றும் ஆனந்தி இருவருமே மீண்டும் மகேசை நம்புகிறார்கள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் துளசி இல்லாமலேயே திருமணத்திற்கு வெற்றிலை பாக்கு மட்டும் மாற்றிக் கொள்வது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

ஆனந்தி அந்த கோவிலுக்கு போகிறாள், அதே நேரத்தில் மகேசும் அந்த கோவிலுக்கு போவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

வெற்றிலை பாக்கு மாற்றும் நேரத்தில் அன்பு நான் ஆனந்தியே காதலிக்கிறேன் என எல்லோரும் முன்னாடியும் சொல்வது போலவும் காட்டப்பட்டிருக்கிறது.

இது நிஜமாகவே நடக்கிறதா, அல்லது அன்புக்கு துளசியுடன் நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News