கூலி படம் 90% முடிந்துவிட்டது. லோகேஷ் கெடு கொடுத்த நாட்களுக்கு முன்னரே இந்த படம் சிறப்பாக முடிந்துவிட்டது. எல்லாமும் கூடி வந்தது போல் எந்த ஒரு தடையும் இன்றி சொன்ன நேரத்திற்கு முன்னாடியே படப்பிடிப்புகளை முக்கால்வாசி க்ளோஸ் செய்து விட்டனர்.
ரஜினி ஒரு மாதம் ஓய்வுக்கு பின்னர் மார்ச் முதல் வாரத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். கூலி படம் முழுக்க முழுக்க விரைவாய் முடிந்ததற்கு காரணம் ரஜினிகாந்த் மட்டுமே. அவருடைய எனர்ஜி தான் இந்த சக்சஸ்.
70 வயதை தாண்டியும், இன்றும் சினிமாவில் ராஜநடை போடும் சிங்கமாய் திரிகிறார். ஜெய்லர் 2 படத்திற்காகவும் எனர்ஜிடிக்காக தன்னை தயார் படுத்தி வருகிறார். அந்த படத்திற்கும் மூன்று மாதங்கள் தான் அவகாசம் கொடுத்துள்ளார்.
இப்பொழுது நடித்து முடித்துள்ள கூலி படத்திலும் சில இடங்களில் லோகேஷ் கனகராஜ், ரஜினியால் இது முடியாது என மிகவும் தயங்கியுள்ளார், சில காட்சிகளை டெக்னாலஜி மூலம் சரி செய்து கொள்ளலாம் என கூறியிருக்கிறார்.
இதனை கேட்டவுடனே ரஜினிகாந்த், இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதாவது ஏ ஐ பிஸ்தாக்கள் இருந்தால் தயவு செய்து வெளியேறி விடுங்கள். இது முழுக்க முழுக்க என் படம், நான் தான் தோளில் சுமக்க வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன் என எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டாராம்.
அதன்பின் ரஜினி ஆடிய ஆட்டம் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது . செம எனர்ஜியோடு அவர் போட்ட ஸ்பீடான ஸ்டெப்பில் மொத்த யூனிட்டும் மெர்சலாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் டெக்னாலஜியே வேண்டாம் என அனைவரையும் அனுப்பிவிட்டார்.