வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டுபாக்கூர் குடும்பத்தால் நீலி கண்ணீர் வடித்து பாண்டியனை ஏமாற்றும் தங்கமயில்.. உதாசீனப்படுத்தும் சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயிலின் அப்பாவை காப்பாற்றுவதற்காக பாக்கியம் பொய்க்கு மேல் பொய் சொல்லி அடுக்கிக் கொண்டே போகிறார். அந்த வகையில் இந்த முறை தங்கமயிலுக்கு பிறந்தநாள் என்பதால் நடுராத்திரியில் வாழ்த்து சொல்ல தான் வந்தார் என்று சொல்லி மொத்த குடும்பத்தையும் நம்ப வைத்து விட்டார்.

இந்த டுபாக்கூர் குடும்பம் என்ன சொன்னாலும் நம்பும் அளவிற்கு பாண்டியன் குடும்பமும் ஏமாந்து போய் வருகிறது. இதற்கு முடிவே இல்லை என்பதற்கு ஏற்ப தங்கமயில் அம்மாவும் வாய்க்கு வந்தபடி எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார். தங்கமயில் பிறந்தநாள் என்று சொன்னதும் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வாழ்த்து சொல்லி மீனா மற்றும் ராஜி கிப்டுகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் வாயை திறந்தாலே பொய் சொல்லி ஏமாற்றி வருகிறோம் என்ற பயத்தில் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் என பதட்டப்படும் தங்கமயிலிடம் பாக்கியம் மற்றும் மாணிக்கம் ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் வந்த சரவணன், தங்கமயிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு எதுவுமே நடக்காத போல் போய்விடுகிறார்.

இதனை பார்த்த தங்கமயில், நான் எவ்வளவு அழுது ஃபீல் பண்ணுகிறேன் என்று தெரிந்தும் ஒரு ஆறுதல் கூட படுத்தாமல் போகிறார். இப்படிப்பட்ட புருஷனை நினைத்து பார்க்கும் பொழுது கூட எனக்கு இன்னும் அதிகமாக வருத்தம் இருக்கிறது. இந்த வாழ்க்கைக்காகவா இவ்வளவு போராட்டம் பொய் பித்தலாட்டமும் பண்ணுகிறோம் என்று சரவணனை நினைத்து தங்கமயில் பீல் பண்ணி பேசுகிறார்.

ஆனால் என்ன நடந்தாலும் தங்கமயில் ஒரு நீலி கண்ணீர் விட்ட மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வருவதால் இன்னும் தொடர்ந்து அனைவரையும் நம்ப வைப்பதற்காக என்னலாம் பொய் சொல்லப் போகிறாரோ. இதையெல்லாம் தொடர்ந்து சரவணன், தங்கமயில் இடம் இன்று வேலைக்கு சேர வேண்டும் வா போகலாம் என்று கூப்பிடுகிறார்.

உடனே தங்கமயில் அம்மா பாக்கியம் அவளிடம் தான் சர்டிபிகேட் இல்லை. ஒரு முறை அவள் வேறு ஒரு வேலையில் சேர்ந்த பொழுது அந்த இடத்தில் சர்டிபிகேட் தொலைஞ்சு போச்சு என்று மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார். என்ன பொய் சொன்னாலும் நம்பற குடும்பம் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்பவர்கள் என்பதற்கு ஏற்ற உதாரணமாக இருக்கிறார்கள்.

இதையும் பாண்டியன் குடும்பம் நம்பிய நிலையில் அடுத்து சர்டிபிகேட்டுக்கு எழுதி புது சர்டிபிகேட் வாங்குவதற்கு முயற்சி எடுக்கலாம் என பாண்டியன் சொல்லிவிட்டார்.

Trending News