வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இதெல்லாம் குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது.. நடிகைக்கு குடைச்சல் கொடுக்கும் மாமியார்

Gossip: பொதுவாக நடிகைகள் முன்னணி அந்தஸ்தில் இருந்தால் பணம் சம்பாதித்து கல்லாவை நிரப்புவதில்தான் குறியாக இருப்பார்கள். ஆனால் இந்த நடிகையோ அதற்கு நேர்மாறாக உள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் திடீரென திருமண பந்தத்திற்குள் நுழைந்து விட்டார். இது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் நடிகையின் வீட்டில் அவசரப்படுத்தியதாலேயே இந்த முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். அதனால் இனிமேல் அவர் படத்தில் நடிப்பது கஷ்டம் தான் என பேசப்பட்டது.

தற்போது நடிகை ஆக்டிவாக இருப்பதை பார்த்தால் கல்யாணம் சும்மா ஒரு பேருக்காக தான் என தெரிகிறது. நடிகை புது பட ப்ரமோஷனுக்கு வந்ததை பார்த்து பலருக்கும் அதிர்ச்சி தான்.

நடிகைக்கு குடைச்சல் கொடுக்கும் மாமியார்

கழுத்தில் தாலியுடன் அவ்வளவு கிளாமராக அவர் வந்திருந்தார். அதேபோல் அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் அவருடைய உடையில் ரொம்பவும் தாராளம் தெரிந்தது.

இதை கணவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லையாம். ஆனால் மாமியார் கடுப்பாகிவிட்டார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் போகவில்லை.

இப்படியே சினிமா விழாவில் அரைகுறை உடையில் திரிந்தால் என்ன அர்த்தம். இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது.

இந்த சினிமா நடிப்பு எல்லாம் வேண்டாம். புருஷனோட சேர்ந்து பிசினஸை பார்த்து குடும்பத்தையும் கவனித்துக் கொள் என கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.

இதனால் நடிகை கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறாராம். ஆனாலும் அவர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை நிறுத்த மாட்டார் என்கிறது திரையுலக வட்டாரம்.

Trending News