வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

குணசேகரனை காப்பாற்ற ஈஸ்வரியை யூஸ் பண்ணும் விசாலாட்சி.. மாமியாருக்காக பின்வாங்கப் போகும் ஜனனி

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனை யார் வெறுத்து ஒதுக்கினாலும் விசாலாட்சிக்கு மட்டும், தன் மகன் மீது இருக்கும் பாசம் என்னைக்குமே குறைந்ததே இல்லை. அதனால் தான் தற்போது குணசேகரன் நம்முடன் இல்லை ஜெயிலில் இருக்கிறார் என்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் விசாலாட்சிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

உடனே ஞானம், ரேணுகாவிற்கு ஃபோன் பண்ணி வாய்க்கு வந்தபடி திட்டி ஒழுங்கு மரியாதையா இப்போ வீட்டுக்கு வர்ற. என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கு நீ அங்க என்ன ஆடிட்டு இருக்க என்று திட்டி விட்டார். அடுத்ததாக நந்தினி மசாலா பொடியை கடையில் கொடுத்து கொண்டு இருக்கும் பொழுது ரேணுகா போன் பண்ணி தாய்க்குலத்துக்கு உடம்பு சரியில்லை என்று வீட்டில் இருந்து தகவல் வந்தது.

உனக்கு ஏதும் போன் வந்ததா என்று நந்தினியிடம் ரேணுகா போனில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கதிர் போன் பண்ணுகிறார். அந்த போனை அட்டென்ட் பண்ணி பேசிய நந்தனிடம் பணிவாக நீ உடனே வீட்டுக்கு வா. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று தகவலை சொல்கிறார். இது பழைய கதிர் இல்லை என்பதற்கு ஏற்ப பேச்சும் வார்த்தைகளும் நன்றாக மாறி இருக்கிறது.

இதுவே நந்தினிக்கு கிடைத்த ஒரு வெற்றி என்பதற்கு ஏற்ப கதிர் கொஞ்சம் பொண்டாட்டி மீது பாசத்தையும் பரிவையும் காட்ட ஆரம்பித்து விட்டார். அடுத்து ஜனனி, கணவன் இல்லாமல் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து காட்ட வேண்டும் என்று போராடும் பெண்மணிகளை ஒன்று சேர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பாடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஜனனிக்கு பக்கபலமாக சக்தி மற்றும் அப்பத்தா இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து விசாலாட்சிக்கு உடம்பு சரியில்லை என்ற விஷயம் ஜனனிக்கும் தெரிந்த நிலையில் வீட்டிற்கு போய் விசாலாட்சியை பார்க்கிறார். அப்பொழுது அம்மா என்ற செண்டிமெண்டில் ஜனனி பேசும் பொழுது எனக்காக ஒரு விஷயத்தை பண்ணனும் நான் ஈஸ்வரியை பார்த்து பேசணும் என்று விசாலாட்சி டிமாண்ட் பண்ணுகிறார். உடனே ஜனனியும், ஈஸ்வரிக்கு போன் பண்ணி விசாலாட்சி இடம் பேச சொல்கிறார்.

அப்பொழுது விசாலாட்சி, ஈஸ்வரிடம் நான் உன்னை பார்த்து பேச வேண்டும். என் மீது உனக்கு உண்மையிலேயே அக்கறையும் பாசமும் இருந்தால் நீ வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார். அதே நேரத்தில் ஈஸ்வரி இருக்கும் இடத்திற்கு தர்ஷன் சென்று அதிகாரமாக ஈஸ்வரிடம் சண்டை போடுகிறார். அந்த வகையில் தர்ஷன் இன்னும் மாறவில்லை என்பதற்கு ஏற்ப அப்பாவுக்கு கொடி பிடித்து இருக்கிறார்.

எப்படியாவது ஈஸ்வரியை வரவைத்து குணசேகரன் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக விசாலாட்சி, ஈஸ்வரியை பார்த்து பேச வேண்டும் என்று நினைக்கிறார். அதே நேரத்தில் மாமியாருக்காகவும் கொஞ்சம் பார்க்க வேண்டும் என்பதால் ஈஸ்வரி, ஜனனி சேர்ந்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதன் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.

இருந்தாலும் வேறு வழி இல்லை குணசேகரன் வந்தால் தான் இன்னும் நாடகம் சூடு பிடிக்கும் என்பதால் மாமியாருக்காக குணசேகரன் மீது வைத்த குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்கும் விதமாக கேசை வாபஸ் வாங்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இனி குணசேகரன் என்னதான் வெளியே வந்து தில்லாலங்கடி வேலை பார்த்தாலும் நான்கு மருமகளின் தன்னம்பிக்கையை யாராலும் உடைக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Trending News